திருச்சியில் வேட்டி சட்டையில் பிரதமர் மோடி.. ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்
திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். ராமேஸ்வரம் - மங்களூர் விரைவு ரயில் உட்பட 5 ரயில் சேவைகளையும் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய மோடி, இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் சுற்றூலா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கூறினார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளார். ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி, மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று திருச்சி பஞ்சப்பூரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கொச்சியில் இருந்து விமானம் மூலமாக பிரதமர் மோடி, மாலை 5 மணியளவில் திருச்சி வருகை தந்தார். அப்போது அவர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்தார். அப்போது அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்று என்.டி.ஏ கூட்டணி தலைவர்களும் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றன.
இதன்பின் எடமலைப்பட்டி புதூரில் நடைபெறும் அரசு விழாவில் சென்னை மணலியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன உயவு எண்ணெய் கலவை ஆலை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நக எரிவாயு திட்டங்களை தொடங்கி வைத்தார்
அதேபோல் 370.52 கிமீ நீளமுள்ள கிராமப்புற சாலைகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதேபோல் ராமேஸ்வரம் - மங்களூரு விரைவு ரயில், நாகர்கோவில்- சார்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில், போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், நெல்லை - மங்களூரு விரைவு ரயில், மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் ஆகிய 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.
இதன்பின் பஞ்சப்பூர், எடமலைப்பட்டி புதூர், சிறப்பு காவல்படை முகாம், மன்னார்புரம் 4 சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக விமான நிலையம் வரை 10 கிமீ தூரம் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடக்க உள்ளது. இதன்பின் இரவு 8 மணியளவில் திருச்சியில் இருந்து பிரதமர் மோடி டெல்லி புறப்படுகிறார். பிரதமரின் வருகையால் திருச்சியில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் இசட் பிரிவு பாதுகாப்பு என்பதால் மத்திய தொழிற்பாதுகாப்பு படை, மாநகர காவல்துறை என்று திருச்சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications