திருச்சி சாதனாவும் வாங்கிட்டாங்க.. காருடன் சர்பிரைஸ் கொடுத்த கணவர்.. என்ன பிராண்டு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: டிக்டாக் மற்றும் யூடியூப் பிரபலம் திருச்சி சாதனா தற்போது ஒரு காரை வாங்கி அதில் அவரது கிராமத்தை வலம் வந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா சினிமாவில் நடிப்பதற்காக நடிப்பு, காமெடி, பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, கோபம், டான்ஸ், கொந்தளிப்பு என பன்முகத்தன்மையை தனது வீடியோக்களில் நடித்து வந்தார்.

நாளடைவில் இவருக்கு சப்ஸ்கிரைபர்கள் கூட கூட கவர்ச்சியான நடன அசைவுகளை பின்பற்றி வந்தார். மேலும் லைவில் சேலை கட்டுவது, லைவில் குளிப்பது என பல அட்ராசிட்டிகளை செய்து வந்தார். இதனால் சாதனாவுக்கு பல கண்டனங்கள் குவிந்தன.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இது தொடர்பாக அவரை காவல் துறை எச்சரித்ததாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு சோகப் பாடலுக்கு வாயசைப்பது என இருந்த சாதனா பின்னர் பழையபடி ஆரம்பித்துவிட்டார். திருச்சி அருகே கிராமத்தில் வசித்து வரும் சாதனா தான் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளையும் வீடியோவில் காட்டுவார். அவர் செய்யும் உணவுகள், அவருக்கு யாரேனும் அனுப்பிய பார்சல்கள் ஆகியவற்றையும் காண்பித்து மகிழுவார்.

யூடியூப்

யூடியூப்

இந்த நிலையில் அண்மைக்காலமாக பல யூடியூப் பிரபலங்கள் கார் வாங்கி வரும் நிலையில் திருச்சி சாதனாவும் தனது கணவரை நச்சரித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து வெளியே சென்ற சாதனாவின் கணவர், சாதனாவுக்கு போன் செய்து காரில் வந்து கொண்டிருப்பதாக சொல்லியுள்ளார். இதனால் உடனடியாக வீடியோ எடுக்க ஆயத்தமானார் சாதனா.

 நண்பர்களே

நண்பர்களே

"நண்பர்களே என் மாமா புதுசா கார் வாங்கிட்டு வர்றாரு. எனக்கு போனில் சொன்னாரு" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் வந்துவிட்டது. உடனே துள்ளி குதித்து ஓடுகிறார். காரை தொட்டு தொட்டு பார்க்கிறார். உள்ளே ஓட்டுனர் இருக்கையிலிருந்து அவரது கணவர் இறங்க, ஏய் மாமா நான் கேட்டது இந்த கார் இல்ல, வேற காரு என்கிறார்.

சேஃப்டி கார்

சேஃப்டி கார்

சாதனா கணவர், இதுதான் சேப்டியான கார், இது அம்பாசிடர் கார் என்கிறார். அதற்கு சாதனா, வண்டியை அடித்து பார்த்துவிட்டு இந்த டப்பா காரை வாங்கிட்டு வந்துருக்கீங்க என்னை ஏமாத்திட்டீங்க என சொல்ல, அதற்கு அவர் ஏய் அப்துல் கலாமே இந்த கார்ல தான் கடைசி வரைக்கும் பாதுகாப்பா போனாரு தெரியுமா, இத போய் டப்பா காருனு சொல்லுற என்கிறார் கணவர்.

ஃபேன் இருக்கு, ஏசி இருக்கு

ஃபேன் இருக்கு, ஏசி இருக்கு

இதையடுத்து காரில் ஃபேன் இருக்கு, ஏசி இருக்கு, இன்னும் என்ன வேணும் என கூறியபடி சாதனாவை காரின் பின்புறம் அழைத்து செல்லும் கணவர், இங்க பாரு எவ்வளோ பெரிய டிக்கி, இதில் விதை நெல், புண்ணாக்கு, தீவனம் எல்லாமே வச்சிக்கிட்டு வரலாம். நம்ம கிராமத்திற்கு ஏற்ற கார் இதுதான் என சொல்கிறார்.

வாழ்த்துங்க நண்பர்களே

வாழ்த்துங்க நண்பர்களே

மேலும் உடனே சாதனாவை காரில் உட்கார வைத்து கணவர் ஒரு ரவுண்ட் அழைத்து செல்கிறார். பின்னர் மாமா சொன்னது எனக்கு இப்போதான் புரியுது. ஒரு லாரியே மோதினாலும் நம்ம கார் கன்னு மாதிரி நிற்குமாம். எனக்கு புடிச்சிருக்கு என்கிறார். பின்னர் இருவரும் காரில் ஒரு ரவுண்ட் செல்ல எங்களை வாழ்த்துங்கள் என கேட்டபடியே அந்த வீடியோ முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+