ராஜபக்சே நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு வரும்! அதிமுகவில் இருந்து விரட்டப்படுவார் -டிடிவி தினகரன்!
திருச்சி: இலங்கையில் இருந்து ராஜபக்சே குடும்பம் எப்படி ஓடினார்களோ, அதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் வரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் என் பக்கம் என்ற வசனம் அண்மைக் காலமாக மீண்டும் கேட்க தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின், இந்த வசனம் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், மீண்டும் ஒன்றரை கோடி தொண்டர்கள் வசனம் பேசப்பட்டு வருகிறது. இந்தத் தொண்டர்களுக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிடிவி தினகரன் பேச்சு
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து டிடிவி தினகரன் கூறுகையில், வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக அரசியலில் ஜனநாயக நாட்டில் தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி செயல்படக்கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள். ஜாதி, மத பேதமில்லாத அதிமுக-வில் ஜாதி, மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்தும் அளவிற்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் வீழ்ச்சி
பிரமாண்டமாக படம் எடுப்பதைப் போல, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக செலவு செய்து பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தானே அறிவித்துக் கொண்டுள்ளார் . அதிமுக இன்று வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தீயவர்களோடு பயணிக்கக்கூடாது என்பதற்காவும், அம்மாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்றும் அமமுகவை உருவாக்கியுள்ளோம்.

இபிஎஸ்-க்கு கண்டனம்
ஜனநாயக முறைப்படி நாங்கள் வெற்றி பெற்று உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தினார் என்பதை வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். அந்த பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். எனக்கு எடப்பாடி பழனிசாமி மீது எதிர்ப்பு உணர்வு கூட கிடையாது. அவர்களுடைய செய்கையை கண்டிக்கிறோம் அவ்வளவு தான்.

ராஜபக்சே நிலை வரும்
எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி உருவாகியிருக்கிறார். ராஜபக்சே குடும்பம் எப்படி இலங்கையை விட்டு ஓடினார்களோ, அதேநிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும். இன்றைக்கு யாரையெல்லாம் தன்வசப்படுத்தி எடப்பாடி பழனிசாமி இந்த நிலையை அடைந்தாரோ, அவர்களாலேயே அம்மாவுடைய இயக்கத்தை விட்டு அவர் விரட்டப்படும் காலம் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்!












Click it and Unblock the Notifications