சின்னபுள்ளதனமால்ல இருக்கு! பெயிண்ட் அடித்து விளையாடும் ஓபிஎஸ்-இபிஎஸ் டீம்! தூத்துக்குடி பாலிடிக்ஸ்
தூத்துக்குடி : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் டெல்லி லெவலுக்கு பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலோ இரு தரப்பு ஆதரவாளர்கள், வடிவேலு பாணியில் சொல்வதென்றால் சின்னபுள்ள தனமாக அரசியல் செய்வதாக உள்ளூர் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை முற்றாக அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாஜக தலைமை போலவே ஓ.பன்னீர்செல்வமும் கடும் அதிருப்தியில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அணிகள் இணைப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் தற்போதைக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

அதிமுக விவகாரம்
இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்து புதிய பொறுப்புகளை வழங்குவது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகளை ஒன்றிணைத்து அவர்களை தனது ஆதரவாளர்களாக மாற்றுவது என பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். ஏற்கனவே பல கட்ட பட்டியல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இன்னும் அடுத்தடுத்து பட்டியல்கள் வெளியாகவும் இருக்கிறது.

ஆதரவாளர்கள் மோதல்
இப்படி எடப்பாடி பழனிச்சாமியும் ஓபன்னீர்செல்வமும் டெல்லி லெவலுக்கு அரசியல் செய்து கொண்டிருக்க பல மாவட்டங்களில் எடப்பாடி தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கும் புதிதாக வாய்ப்பு பெற்ற ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்களுக்கு மோதல் களைகட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் யார் பெருசு என அடிச்சுக்காட்டு லெவலுக்கு அரசியல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலோ இரு தரப்பு ஆதரவாளர்கள், வடிவேலு பாணியில் சொல்வதென்றால் சின்னபுள்ள தனமாக அரசியல் செய்வதாக உள்ளூர் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

எம்ஜிஆர் சிலை
இந்நிலையில் தான் தூத்துக்குடி கிப்சன் புரத்தில் எம்ஜிஆரின் மார்பளவு சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருந்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி நிர்வாகிகளின் பெயர் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி கிப்சனபுரத்தில் எம்ஜிஆர் மார்பளவு சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஏசாத்துரை ஆகியோர் பெயர் இடம் பெற்று இருந்தது.

பெயிண்ட்
இதை தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட செயலாளராக ஏசத்துரையை ஓபிஎஸ் அறிவித்தார். இதை தொடர்ந்து அந்த கல்வெட்டில் இருந்த ஏசாத்துரை பெயரை அழித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பெயர் எழுதப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அவர் தரப்பு ஆதரவாளர்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர். மாறி மாறி புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்பி சண்முகநாதன்
இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்பி சண்முகநாதன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பெயர் எழுதப்பட்டிருந்ததை நேற்று நள்ளிரவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒயிட் பெயிண்ட் கொண்டு அழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிமுகவின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சின்னப்புள்ளதனமா பெயிண்ட் அடிச்சு விளையாடுறீங்களே என பிற கட்சியினர் இரு தரப்பையும் விமர்சித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!










Click it and Unblock the Notifications