பாஜக தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறது - கனிமொழி எம்.பி. காட்டம்
தூத்துக்குடி : தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுமக்கள், நீட் தேர்வை எதிர்க்கும் நிலையில், நீட் தேர்வை பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட்தேர்வு காரணமாக கடந்த ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் இதையடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில் நீட் விளக்கு சட்ட மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

பாஜக வெளிநடப்பு
இந்த நிலையில் நீட் விளக்கு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும், நீட் தேர்வால் இட ஒதுக்கீட்டை விட அதிகமான இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெறுகின்றனர் எனவும், நீட் தேர்வு காரணமாக எள் முனையளவு கூட பாதிப்பில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருந்தார்.

கனிமொழி எம்.பி. கண்டனம்
வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி , பாஜகவின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது மட்டும் இன்றி தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் இந்த திட்டத்தை பாஜக ஆதரிப்பது தமிழக மக்களுக்கு விரோதமான செயல்பாடாகும் என சாத்தான்குளத்தில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

பாஜக துரோகம் செய்கிறது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள லக்ஷ்மிபுரம், கருங்கடல், நெடுமாங்குளம் ஆகிய பகுதிகளில் சுற்றுப்புற காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள கூடிய வகையில் செயல்படுத்தப்பட உள்ள காலநிலை சரிபார்ப்பு திட்டங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மட்டுமின்றி பெரும்பாலான அனைத்து அரசியல் இயக்கங்களும் பொதுமக்களும் எதிர்க்கக்கூடிய நீட் தேர்வு சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என்றார். மேலும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதால் அதனை எதிர்க்கும் நிலையில், நீட் தேர்வை பாஜக ஆதரிப்பது என்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என கடுமையாக விமர்சித்தார்.
-
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications