“சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு”.. 51 ஆண்டுக்கு பின் புத்தகத்தை திருப்பி தந்த நபர்!
நூலகத்தில் எடுக்கப்பட்ட புத்தகம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுக்கப்பட்ட சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.
வான்கூவர்: நூலகத்தில் எடுத்த புத்தகத்தை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் திருப்பிக் கொடுத்தச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.
நினைத்த புத்தகங்களை எல்லாம் விலை கொடுத்து எல்லோராலும்.. அதற்காக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மக்கள் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை சாதகாகப் பயன்படுத்திக் கொண்டு, நல்ல புத்தகங்களை ஒரு சிலரே வைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எடுத்த புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற விதி உள்ளது. அதனை மீறினால் அதற்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆனால் இது எதுபற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கணக்கில் நூலகத்தில் எடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருப்பவர்களும் உண்டு. அப்படி நீண்ட காலம் கழித்து நூலகத்தில் ஒப்படைக்கப்பட்ட புத்தகத்தைப் பற்றிய செய்தி தான் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

வான்கூவர் நூலகம்
கனடாவில் உள்ள வான்கூவர் பொது நூலகத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த நூலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட புத்தகத்தின் புகைப்படங்களையும் அந்த நூலகம் இணைத்துள்ளது.

அப்படியே புதுசு மாதிரி..
புத்தகத்தை எடுத்தவர் படித்தாரா இல்லை அப்படியே பரணில் போட்டு வைத்து விட்டு, இப்போது தூசி தட்டி திருப்பிக் கொடுத்திருக்கிறாரா என ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் புத்தகம் உள்ளது. அந்தப் புத்தகத்தில் நூலகத்தில் புத்தகத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய தேதி என 1971 ஏப்ரல் 20ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜஸ்ட் 51 ஆண்டுகள்
கண்ணைக் கசக்கி எல்லாம் நீங்கள் படித்த தேதி சரிதானா என நீங்கள் சரி பார்க்க வேண்டாம். ஆம், சுமார் 51 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்தப் புத்தகம் தற்போது நூலகத்தில் திருப்பி தரப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் ஹாரி எட்வர்ட் நெய்ல் என்பவர் எழுதிய தி டெலஸ்கோப் என்பது ஆகும்.

தேங்க்யூ.. சாரி..
கூடவே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவர் அழகிய குறிப்பு ஒன்றையும் காகிதத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். அதில், 'புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னியுங்கள். 51 வருடங்கள்.. ஆனாலும் இப்போதும் அதே நிலையில் புத்தகம் உள்ளது. நன்றி' என எழுதப்பட்டுள்ளது.

அபராதம் இல்லை
51 ஆண்டுகள் ஆகி விட்டதால் அந்தப் புத்தகத்திற்கு எவ்வளவு அபராதம் செலுத்தப்பட்டிருக்கும் என்றெல்லாம் நீங்கள் கணக்குப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தாமதக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நூலகம் ரத்து செய்து விட்டது. 'பாவம் அவருக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது போல..' என நெட்டிசன்கள் இதற்கு கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

இது புதுசு
சமீபத்தில் 48 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ஒருவர், தான் எடுத்த புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலானது. அவருக்கு நன்றி தெரிவித்து லைப்ரரி நிர்வாகம் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இப்போது அவருக்கும் சீனியராக, 51 ஆண்டுகள் கழித்து, நூலகத்தில் புத்தகம் ஒன்று திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications