விடாத மழை பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு.. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வேலூர்: தமிழக - ஆந்திர எல்லையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் அம்மாநில நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் வேலூர் மாவட்டம் பாலாற்றில் தற்போது 4 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து உள்ளது.

பாலாற்றின் துணை ஆறுகளான மண்ணாற்றில் இருந்து 280 கன அடி, கல்லாற்றில் இருந்து 40 கன அடியும், மலட்டாற்றில் இருந்து 1,600 கன அடியும், பள்ளிகொண்டா அகரம் ஆற்றில் இருந்து 25 கன அடியும் பாலாற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல், வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகள் மூலம் பாலாற்றுக்கு 20 கன அடியும், பள்ளிகொண்டா ஏரி நிரம்பியுள்ளதால் அதிலிருந்து பேயாறு வழியாக பாலாற்றுக்கு 10 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுகளில் பாலாற்றில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பாலாற்றின் இரு கரையோர மக்கள் எவரும் பாலாற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் துணிகளை துவைப்பது, விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது, குறுக்குச்சாலையாக ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என வேலூர் மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் 3 வது முறையாக முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.இதனால் ஆம்பூரில் இருந்து அழிஞ்சிகுப்பம், மேல்வழித்துணையாங்குப்பம், மேல்பட்டி, கீழ்பட்டி வளத்தூர் செம்பேடு நரியம்பட்டு, சங்கராபுரம், கடாம்பூர் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், இதேபோல் அப்பகுதியில் இருந்து ஆம்பூருக்கு வரக்கூடிய பொது மக்களின பாதுகாப்பு கருதி பாலத்தை கடக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications