கோயிலுக்கு செல்லும்போது கோர விபத்து.. ஜவ்வாது மலையில் பின்னோக்கி ஓடிய வேன் கவிழ்ந்து 7 பேர் பலி
திருப்பத்தூர் : ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்து குழிக்குள் விழுந்த விபத்தில் கோயிலுக்கு சென்ற 7 பேர் உயிரிழந்தனர்.
ஜவ்வாது மலையில் அமைந்து இருக்கும் புதூர் நாடு, புங்கப்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 கிராமங்களில் சுமார் 30,000-க்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சேம்பரை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு கரடு முரடான மலைப் பாதையில் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு காரணமாக ஜவ்வாது மலை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.
இன்று ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டு செல்வதற்காக சரக்கு வேன் ஒன்றில் ஏராளமான பக்தர்கள் ஜவ்வாது மலையில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது மலைப்பாதையில் பாரம் தாங்க முடியாமல் வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
வேன் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி சென்று 50 அடி ஆழம் கொண்ட குழிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மேலும் இருவர் விபத்து நடந்த சில நிமிடங்களில் பலியாகினர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கரடு முரடான மலை பாதை காரணமாகவும், செல்போன் சிக்னல்கள் முறையாக கிடைக்காததாலும் மீட்புப் பணிகள் தாமதமாகவும் தொய்வுடனும் நடைபெற்றன.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications