வேலூர் லாட்ஜ்களில் விபச்சாரம்.. குடியாத்தத்தில் ஐடி கம்பெனி வேலைன்னு சொன்னாங்க.. ஆனா நடந்தது வேற
வேலூர்: தமிழகம் முழுவதும் விபச்சாரம் மற்றும் சட்டவிரோத பாலியல் செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நேற்று நடந்துள்ளது...
கடந்த வாரம் சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார், வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த காயத்ரி (31) என்பவரை கைது செய்தனர்.

வாடகை வீட்டில் பாலியல் தொழில்
அதாவது வாடகை வீட்டில் இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார் காயத்ரி.. இது உறுதி செய்யப்பட்ட நிலையில், 4 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காயத்ரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியில் ஆன்லைன் ஆப் மூலம் போதைப்பொருள் வாங்கி வைத்திருந்த புரசைவாக்கத்தை சேர்ந்த அமீர்பாஷா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.......
அவரிடமிருந்து 3 கிராம் மெத்தம்பெட்டமைன், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. Grindr App மூலம் போதைப்பொருள் வாங்கியதாகவும், ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டது நினைவிருக்கலாம்...
வேலூரில் லாட்ஜ்களில் விபச்சாரம்
இந்நிலையில்தான் வேலூரிலும் இப்படியான கைது நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.. வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக அறிமுகமில்லாத ஆட்கள் அடிக்கடி வருவதும் போவதுமாக இருப்பதை கவனித்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்... சோதனையில், அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 3 பெண்களையும், இந்த தொழிலை நடத்தி வந்த செல்வகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் ஐடி கம்பெனி
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படை போலீசார் நேற்று குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சந்தேகத்துக்குரிய விடுதிகள், வீடுகள் மற்றும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
இதில், குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் மற்றும் அருகிலுள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து, கம்பெனிகளில் வேலைக்கு செல்பவர்களாக சொல்லி, பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.
16 பேர் சுற்றி வளைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தம் 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா, இதுபோன்ற சம்பவங்கள் மற்ற பகுதிகளிலும் நடைபெறுகிறதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்ற தகவல்களின் அடிப்படையிலேயே பல்வேறு சட்டவிரோத செயல்கள் தடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்...!!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications