உயர்ரக மதுவில் ஊறவைக்கப்பட்ட 50கி உலர் பழ வகைகள்... சேலத்தில் நடந்த கேக் மிக்ஸிங் நிகழ்ச்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சேலம் தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய முறையில் கேக் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 50 கிலோ எடை கொண்ட உலர் பழ வகைகள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பருப்பு வகைகள் பழ ரசம் மற்றும் உயர்ரக மதுவில் ஊற வைக்கப்பட்டது. சுமார் ஒரு மாத கால அளவில் ஊற வைக்கப்படும் இவை, கிறிஸ்துமஸின் போது கேக் செய்யப் பயன்படுத்தப்படும். இந்த கலவையில் இருந்து சுமார் 75 கிலோ முதல் 100 கிலோ வரை பிளம் கேக் தயாரிக்க முடியும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The traditional ceremony of cake mixing commences more than a month ahead of Christmas, so that the colourful and mouth watering cakes are ready by the festival time. In Salem, a famous hotel have started preparing the christmas cakes.
Please Wait while comments are loading...