கேட்பாரற்றுக் கிடந்த பையில் 10 நாட்டு வெடிகுண்டுகள்... தேனி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கேட்பாரற்று பை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பையைத் திறந்து பார்த்தனர். அதில்,10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாட்டுவெடிகுண்டுகளுடன் அந்தப் பையை சாலையில் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இருப்பினும், கேட்பாரற்றுக் கிடந்த பையில் நாட்டு வெடிகுண்டு இருந்தது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police on Tuesday seized 10 country-made bombs from a road near Theni.
Please Wait while comments are loading...