பாஜகவின் கஜானாவில் ரூ.10000 கோடி டெபாசிட் பின்னணி? மத்திய பட்ஜெட்டை கிழித்து தொங்கவிட்ட CPM சண்முகம்
விருதுநகர்: இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத்தொகை வைத்துள்ள ஒரே கட்சி பாஜகதான்.. இந்த பிரம்மாண்டமான தொகை அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பாஜக என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார்.

அப்போது, நாட்டின் தற்போதைய நிதிநிலை அறிக்கையானது மக்கள் எதிர்நோக்கியுள்ள எந்தவொரு அடிப்படை பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வகையில் அமையவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் - ஏகாதிபத்தியத்தின் வரிவிதிப்பு
குறிப்பாக, இந்தியாவின் தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ள வேலையின்மைக்கு இந்த பட்ஜெட்டில் மருந்தில்லை என்றார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபரிமிதமான வரி விதிப்பு காரணமாக, இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில் முடக்கத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழலும், பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான எந்தவொரு ஆலோசனையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று மூத்த தலைவர் சண்முகம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
அதேபோல், 125 நாட்கள் வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்திவிட்டு, அதற்காக வெறும் 95 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென்றால் குறைந்தது நான்கு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிதியை வைத்துக்கொண்டு 30 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்றார்.
இந்த திட்டத்தை உற்சாகமாக வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல், கிராமப்புற ஏழை மக்களை ஏமாற்றுவதில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் மாநில செயலாளர் சண்முகம்,சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.
ஓசூர் விமான நிலையம்
தொடர்ந்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து பேசிய சண்முகம், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்பதையும், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கடைப்பிடிப்பதன் வெளிப்பாடுதான் இது.. ஆனால், தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒரே திட்டமான புல்லட் ரயில் திட்டமானது அறிவித்தபடி நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
10 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை
அரசியல் சூழல் குறித்து பேசும்போது, திமுக கூட்டணி தற்போது வலிமையாக இருப்பதாகவும், பிற கட்சிகளை இணைப்பது குறித்து திமுகவே முடிவெடுக்கும் என்றும், அதில் மார்க்சிஸ்ட் கட்சி தலையிடாது என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை வைத்துள்ள ஒரே கட்சி பாஜகதான்.. இந்த பிரம்மாண்டமான தொகை அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பாஜக என்று பேட்டியில் காரசாரமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார் மாநில செயலாளர் சண்முகம்..
-
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!












Click it and Unblock the Notifications