திமுக இளைஞரணி மாநாடு.. இருக்கைகளில் ஸ்நாக்ஸ் பைகள்.. பிரியாணி ரெடி! தடபுடல் ஏற்பாடுகள்!
விருதுநகர்: திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக ஸ்நாக்ஸ், குடிநீர் பாட்டில் , ஜூஸ் அடங்கிய பைகள் நாற்காலிகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரியாணியும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்த வகையில் திமுகவும் தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் மும்முரம் காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பொதுக்குழு கூட்டம், அதைத் தொடர்ந்து உடன்பிறப்பே வா சந்திப்பு, கரூரில் திமுக முப்பெரும் விழா, திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு என திமுக தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
தேர்தலை எதிர்நோக்கி, திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி மாநாடுகள் அடுத்தடுத்து மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் 20 திமுக அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தென் மண்டலத்தை சார்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பேரூராட்சி அலுவலக இளைஞரணி நிர்வாகிகள் உள்பட சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்காக ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் முன்னேற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில், நொறுக்குத் தீனி, கடலை மிட்டாய், ஜூஸ் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சிற்றுண்டி பை வழங்கப்படுகிறது. இளைஞரணி நிர்வாகிகள் அமர்வதற்காக போடப்பட்டுள்ள நாற்காலிகளில் இந்த சிற்றுண்டி பை ரெடியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்காக சுத்தமான முறையில் சுகாதாரமான முறையில் சுடச்சுட பிரியாணி செய்யப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மட்டன் பிரியாணியை சுகாதாரமான முறையில் தயார் செய்து அனைத்து பிரியாணியையும் பேக் செய்து வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications