இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்.. அமெரிக்கா பரபர அறிக்கை.. கடும் குற்றச்சாட்டு!
வாஷிங்டன்: இந்தியாவில் 2021ம் ஆண்டு சிறுபான்மை சமூகத்தினர் மீதான கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல்கள் ஆண்டு முழுவதும் நடந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் மதசுதந்திரம் குறித்த மதிப்பீடுகளை அமெரிக்கா மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் ஒவ்வொரு நாடுகள் பற்றியும் தனித்தனி அத்தியாயங்கள் இடம்பெறும்.
இந்த அறிக்கைக்கு தொடர்ச்சியாக இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள மதசுதந்திரங்கள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கை வெளியீடு
2021ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அரசு சிறுபான்மையினரின் நிலை குறித்து எந்த கருத்தையும் கூறுவதை தவிர்க்கிறது. ஆனால் இந்திய பத்திரிகைகள், இந்திய அரசுகளின் அறிக்கையின் பல்வேறு அம்சங்கள் நாட்டில் உள்ள நிலைகளை உணர்த்துகின்றன. அதனடிப்படையில் இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் சிறுபான்மை நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொலைகள், தாக்குதல்கள்
இந்தியாவில் மதசிறுபான்மை மக்களுக்கு எதிரான கொலைகள், தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள் ஆண்டு முழுவதும் நடந்தன. பசுவதை அல்லது மாட்டிறைச்சி தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான செயல்கள் நடந்தேறின. இந்தியாவில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே டிஎன்ஏவைக் கொண்டுள்ளனர் என்றும், மதத்தால் வேறுபடுத்தப்படக்கூடாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மோகன் பகவத் கருத்து
இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவரராக கருதப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த ஜூலை மாதம் ‛‛இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே டிஎன்ஏ உள்ளது. மதத்தால் யாரையும் வேறுபடுத்தக்கூடாது. இந்துக்கள், முஸ்லிம்கள் என நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியர்களாக மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயப்பட வேண்டாம். பசுவதைக்காக இந்துக்கள் அல்லாதவர்களைக் கொல்வது இந்து மதத்திற்கு எதிரான செயல்'' என அவர் கூறியிருந்தார். அதேபோல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செப்டம்பர் 12ல் ‛‛முந்தைய அரசு முஸ்லிம் தொகுதிகளுக்கு ஆதரவாக சலுகைகள் வழங்கின'' என தெரிவித்து இருந்தனர்.

தாக்குதல்
மேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம், மற்றும் பல்வேறு நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில், மக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டிருக்கிறோம். மேலும் 28 மாநிலங்களில் பசுவதை,ம மதமாற்ற எதிர்ப்பு சட்டங்கள் உள்ளன அல்லது சட்டத்துக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி பீகாரில் இருந்து குடியேறிய ஜம்மு காஷ்மீரில் குடியேறிய இந்து தொழிலாளர்கள், சீக்கிய சிறுபான்மையினரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இதனால் புலம்பெயர்ந்தோர் அங்கிருந்து வெளியேறும் நிலை உள்ளது. மேலும் திரிபுரா, ராஜஸ்தான் மாநிலங்களில் முஸ்லிம்கள் அடித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்சிஆர்ஏ
மேலும் ஊடகங்கள் அல்லது சமூகவலைதளங்களில் இந்துக்கள் அல்லது இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இந்து அல்லாதவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மத அமைப்புகள் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு நிதியின் அளவைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டு பங்களிப்புகளுக்கான ஒழுங்குமுறை சட்ட திருத்தம் (எப்சிஆர்ஏ) 2020 நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான ஊடக செய்திகளின் அடிப்படையில் 5,789 தொண்டு நிறுவனங்களின் எப்சிஆர்ஏ உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானது.

பிற நாடுகள் நிலவரம்
அதோடு வியட்நாம் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் மதவெளிப்பாடுகள் குறைந்து வரும் நிலையில் சவுதி அரேபியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மதம்சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சீனா முஸ்லிம் உய்குர் மற்றும் பிற மத சிறுபான்மை மக்களின் மீது அடக்குமுறையை தொடர்கிறது. ஏப்ரல் 2017 முதல் 1 மில்லியனுக்கும் அதிகமான உய்குர் இன கசாக்ஸ், கிர்கிஸ் மற்றும் பிறர் சின்ஜியாங்கில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கு தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது'' என்பன போன்ற விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications