Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடு.. ஒரே ஜூம் காலில் 900 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்த சிஇஓ.. இப்போ என்னாச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரே வீடியோ காலில் 900 ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கிய Better.com தலைமை நிர்வாக அதிகாரி விஷால் கார்க்கை அந்நிறுவனம் கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் Better.com - இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்குக் கடன், காப்பீட்டு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் என்பவர் இருந்து வருகிறார்.

 ஒரே வீடியோ கால்

ஒரே வீடியோ கால்

கடந்த வாரம் இவர் செய்த செயல் சர்வதேச அளவில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 900 பேரை ஒரே வீடியோ காலில் வேலையை விட்டு நீக்கினார் இது அந்நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 9% ஆகும். இது தொடர்பான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது Better.com நிறுவனத்திற்கு மிகப் பெரிய கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது.

 மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு கேட்டார்

இதையடுத்து விஷால் கார்க் தனது செயலுக்குப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டார். 900 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது தனது முடிவு மட்டுமே என்றும் அதைச் சரியான முறையில் செய்யாமல் இருந்தது 100% தனது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், நிலைமை சுமுகமானதாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் தாங்களாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்தனர்.

 தற்காலிக விடுப்பு

தற்காலிக விடுப்பு

ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் விஷால் கார்க் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் விஷால் கார்க்கை தற்காலிக விடுப்பில் அந்நிறுவனம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக உள்ள கெவின் ரியான் அன்றாட பணிகளைக் கவனிப்பார் என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

நிறுவனத்தின் தலைமை மற்றும் பணிச் சூழல் குறித்து மதிப்பீட்டு செய்து அறிக்கை அளிக்கவும் தனியாக ஒரு நிறுவனத்துடன் Better.com ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அந்நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த அறிக்கைக்குப் பின்னரே நிர்வாக குழு சில முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Better.com, கடந்த மே மாதம் பொதுமக்களின் முதலீட்டைப் பெறும் வகையில் விரைவில் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்போவதாக அறிவித்தது. இந்தச் சூழலில் தான் சந்தை, செயல்திறன் காரணமாக 900 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக விஷால் கார்க் சர்ச்சையைக் கிளப்பியிருந்ததது. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+