70 ஆண்டு காத்திருப்பு.. ரெடியான புலி முக விமானம்! இந்தியாவில் கர்ஜிக்க போகும் நமீபியா "சீட்டாக்கள்"!

Subscribe to Oneindia Tamil

சிறுத்தைகளில் 4 வகை இனங்கள் உண்டு. இதில் உலகிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினமான சீட்டா (சிவிங்கி புலிகள்)வும் சிறுத்தைப்புலி இனத்தில் ஒன்றாகும்.

இந்தியாவில் ஒரு காலத்தில் இந்த சீட்டாக்கள் அதிக அளவில் இருந்தன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்காக சீட்டாக்களை வேட்டையாடினர்.

சீட்டா வகை புலிகள்

சீட்டா வகை புலிகள்

இதனால், இந்தியாவில் சீட்டாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் கடந்த 1947-ம் ஆண்டு ஒரு சீட்டா தென்பட்டது. அதன்பிறகு 1952-ல் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை சீட்டா வகை புலிகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லை. எனவே இந்தக் குறையை போக்குவதற்கு திட்டமிட்ட இந்தியா இதற்காக நமீபியாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

8 சீட்டாக்கள்

8 சீட்டாக்கள்

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட உள்ளன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து இந்த 8 சீட்டாக்கள் இந்தியா கொண்டு வரப்படுகிறது. 5 பெண் சீட்டாக்கள் மற்றும் 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்ட உள்ளன. 5 பெண் சீட்டாக்களும் 2 முதல் 5 வயதுகளில் ஆனவை ஆகும். ஆண் சீட்டாக்கள் 4.5 முதல் 5.5 ஆண்டு வயதுகள் நிரம்பியவையாக உள்ளன. 2 வயதான ஒரு சீட்டா தனது சகோதரரான இன்னொரு சீட்டாவுடன் கடந்த ஆண்டு நமீபியாவின் கோபாபிஸ் நகரத்தில் உள்ள ஒரு நீர் பள்ளத்தாக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

 சீட்டாக்களின் வயது

சீட்டாக்களின் வயது

காட்டுத்தீ காரணமாக இந்த சீட்டா குட்டிகள் தாயிடம் இருந்து பிரிந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. இவற்றை மீட்டு நமீபியாவின் வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வளர்த்தனர். 2020 ஆம் ஆண்டு முதல் சீட்டா வனக்காப்பகத்தில் இந்த குட்டிகள் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது இந்திய மண்ணில் இந்த சீட்டாக்கள் கம்பீர நடை போட இருக்கின்றன. அதேபோல் மற்றொரு பெண் சீட்டாவின் வயது 3 முதல் 4 ஆக இருக்கும். இந்த சீட்டா கடந்த 2020 ஆம் ஆண்டு சீட்டாக்களின் காப்பகம் அருகே உள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது. இன்னொரு பெண் சீட்டா 2 முதல் இரண்டரை வயது ஆனதாக இருக்கலாம். இந்த சீட்டா ஒரு தனியார் காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

 5 ஆண் சீட்டாக்கள்

5 ஆண் சீட்டாக்கள்

மீதமுள்ள இரண்டு சீட்டாக்களும் 5 வயது ஆனவையாகும். இதில் ஒரு சீட்டா ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பண்ணை பணியாளர்களால் 2017-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த சீட்டா 2018 ஆம் ஆண்டு சீட்டா பாதுகாப்பு திட்ட (CCF) மையத்திற்கு 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 3 ஆண் சீட்டாக்களில் இரண்டு சீட்டாக்கள் ஒன்றாக பிறந்தவை. இந்த சீட்டாக்களின் வயது 5 முதல் 6 வயதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நமீபியாவின் ஓட்ஜிவரோங்கோவில் உள்ள CCF காப்பகத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு சீட்டாக்களும் வளர்ந்து வருகின்றன. மீதமுள்ள ஒரு சீட்டாவின் வயது 4 அல்லது நான்கு அரை வயதுடையதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புலி முகம் போல் விமானம்

புலி முகம் போல் விமானம்

பிரதமர் மோடியின் பிறந்த நாள் அன்று இந்த 8 சீட்டாக்களும் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த சீட்டாக்களை இந்தியா அழைத்து வர நேற்றே இந்திய விமானம் நமீபியா சென்றடைந்தது. இதற்காக இந்திய விமானத்தில் பிரத்யேகமாக புலியின் முகம் போல் விமானத்தின் முன்பகுதி வரையப்பட்டிருந்தது. புலி போன்ற தோற்றத்துடன் இந்த விமானம் நமீபியாவில் சீட்டாக்களை அழைத்து வர தயாராக இருந்தது. v

புறப்பட தயாராக..

புறப்பட தயாராக..

நாளை பிரதமர் மோடியின் பிறந்த நாள் என்பதால் அதற்குள் அங்கிருந்து சீட்டாக்களுடன் அந்த விமானம் இந்தியா வந்தடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதற்காக இந்தியாவிலும் சீட்டாக்களை வரவேற்க முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. இந்திய மண்ணில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டாக்கள் கம்பீர நடை போட இருப்பதால் அந்த 8 சீட்டாக்களையும் வரவேற்க தயார் நிலை செய்யப்பட்டுள்ளது. நமீபியாவின் ஹோசியா குடாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட தயாரக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+