Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. சர்ரென வானில் பறக்கும் ‛பைக்’.. நவீன தொழில் நுட்பத்துடன் கண்டுபிடிப்பு! விலைய பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் முதல் முறையாக விமானம் போல் வானில் பறக்கும் ‛பைக்கை' ஜப்பான் நாட்டு நிறுவனம் கண்டுப்பிடித்துள்ளது. இந்த பறக்கும் ‛பைக்' அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் விலை உள்ளிட்ட பிற விபரங்கள் வெளியாகி உள்ளன.

உலகில் தொழில்நுட்பம் வளரவளர புதிய கண்டுப்பிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு துறைகளில் அதிநவீன மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக போக்குவரத்து துறையில் தினமும் புதிய தொழில்நுட்பங்களுடன் வாகனங்கள் அறிமுகம் ஆகி வருகின்றன. பெட்ரோல், டீசலில் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் அதுசார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வாகன தொழில்நுட்பம்

வாகன தொழில்நுட்பம்

அதன்படி தற்போது பெட்ரோல், டீசல் எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் மின்சாரம், சூரிய சக்தி உதவியுடன் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கார் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களிலும் செல்லும் சாலையின் வடிவமைப்பை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள், கேமராக்களை கொண்ட வாகனங்களும் வடிமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பறக்கும் பைக் அறிமுகம்

பறக்கும் பைக் அறிமுகம்

இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்பாது புதிய வகையிலான பைக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை நாம் சாலையில் ஓட்டி செல்ல வேண்டாம். விமானம், ஹெலிகாப்டரை போல் வானில் பறந்து செல்லலாம். உலகின் முதல் 'பறக்கும் பைக்'கான இந்த வாகனத்தை ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‛ஏர்கின்ஸ் டெக்னாலஜி' சார்பில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

 வெளியான வீடியோ

வெளியான வீடியோ

இந்நிலையில் அமெரிக்காவின் டெட்ராய்ட் வாகன கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் ‛ஏர்கின்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் சார்பில் பறக்கும் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக் வானில் எப்படி பறக்கும் என்பது பற்றிய சோதனை ஓட்டம் காண்பிக்கப்பட்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி விவாதப்பொருளாகி உள்ளது.

 இயங்குவது எப்படி?

இயங்குவது எப்படி?

XTURISMO என இந்த பறக்கும் பைக்கிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை டெட்ராய்ட் வாகன கண்காட்சியின் இணை தலைவர் தாட் ஸ்ஸோட் இயக்கி பார்த்தார். மேலும் ‛இந்த பறக்கும் பைக் உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது' என தெரிவித்துள்ளார். இந்த பைக் Internal combustion plus Battery வகையில் இயங்கும்.

40 நிமிடம்-99 கிமீ வேகம்

40 நிமிடம்-99 கிமீ வேகம்

இந்த பைக்கால் தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் வரை வானில் பறக்க முடியும். நவீன முறையில் பறக்கும் தொழில்நுட்பத்தில் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 கிலோகிராம் எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 99 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். இந்த பைக்கின் இந்திய மதிப்பு என்பது ரூ.6.20 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏற்கனவே கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு ஜப்பானில் விற்பனைக்கு உள்ள நிலையில் 2023ல் அமெரிக்காவில் விற்பனைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+