1971ம் ஆண்டு.. தமிழகத்திலிருந்து காணாமல் போன சம்பந்தர் சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் நந்தனபுரிஸ்வரர் சிவன் கோவிலில் காணாமல் போன சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலக சந்தையில் ஆயுதம் மற்றும் போதை பொருளுக்கு அடுத்ததாக கலைநயம் மிக்க சிலைகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. இதனால், சிலை கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் இங்குள்ள சிலைகள் விலைபோவதால், குறுக்கு வழியில் பணம் ஈட்ட நினைப்பவர்கள் இத்தகைய சிலை கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதோடு, அதற்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

நந்தனபுரிஸ்வரர் சிவன் கோவில்
கடந்த சில வருடங்களாக சிலைகள் திருடு போகும் செய்திகளும், சிலைகள் மீட்கப்பட்ட செய்திகளும் அடிக்கடி வெளியாகி வருவதை காண முடியும். அதுவும் புகழ்பெற்ற, மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ள கோவில்களிலேயே சிலை திருடுபோகும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில், கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.

ஒரு சிலை கண்டுபிடிப்பு
இந்த கோவில் இருந்து 1971ம் ஆண்டு, அதாவது சுமார் 51 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் பார்வதியின் சிலைகள் உள்பட 5 சிலைகள் திருடுபோனது. ஆனால் இதுகுறித்து 2019-ம் ஆண்டு தான் கோவில் அறங்காவலர், தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சிலை தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் ஆரம்பத்தில் இதன் விசாரணை மந்தமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக திருடு போன 5 சிலைகளில் பார்வதி சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கண்டெடுப்பு
அந்த சிலையை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீதமுள்ள சிலைகளையும் தேடும் பணியில் சிலை தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட வெண்கல சம்பந்தர் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் ஏல நிறுவனமான கிறிஸ்டிஸ் என்ற நிறுவனம் தனது இணையதளத்தில் காட்சிக்கு வைத்திருந்த சிலைகளில் சம்பந்தர் சிலை இருந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்தியா கொண்டு வர நடவடிக்கை
பழைய சம்பந்தர் புகைப்படங்களுடன் தற்போது அமெரிக்க நிறுவனத்தில் இருந்த புகைப்படங்கள் ஒத்துப்போவதை உறுதி செய்த அதிகாரிகள், சிலையை மீட்டுத்தருமாறு அமெரிக்காவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தியா-அமெரிக்கா இடையே இது தொடர்பான ஒப்பதங்கள் இருப்பதால், அதை பயன்படுத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கிறிஸ்டிஸ் ஏலத்தில் சிலை இருப்பதை உறுதி செய்து அதை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் ஒப்பந்தப்படி சிலையை மீட்டு கும்பகோணம் தண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் உள்ள சிவன் கோவிலில், விரைவில் சிலை மீண்டும் வைக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications