இன்று எங்கள் அம்மா பெருமிதமடைந்திருப்பார்.. அம்மாவின் படத்துடன் ட்வீட் போட்ட கமலா ஹாரிஸ் சகோதரி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: தங்களது அம்மா இன்று பெருமிதமடைந்திருப்பார் என அவரது படத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் கமலா ஹாரிஸின் சகோதரி மாயா ஹாரிஸ்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வாகை சூட, துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷியாமளா கோபாலனுக்கும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஹாரிஸுக்கும் மகளாக பிறந்தவர் கமலா ஹாரிஸ்.

அவரது சகோதரி மாயா ஹாரிஸ், கமலாவின் வெற்றியை பகிர்ந்துள்ளார். மேலும் எங்களது தாயார் எங்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என கற்றுத் தந்தார். இன்று அவர் அளவில்லாத பெருமிதம் அடைந்திருப்பார் என பதிவிட்டுள்ளார்.
Mommy taught us we could be and do anything. She would be beyond proud today.😭😭😭 pic.twitter.com/OZEw6MCPCD
— Maya Harris (@mayaharris_) November 7, 2020
மேலும் தாயார் ஷியாமளா கோபாலன் புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications