அட என்னங்க இது?.. இப்படி புகை விடுது.. பறவையை பார்த்து வியந்த நெட்டிசன்கள்! பரவும் வீடியோ
வாஷிங்டன்: மரத்தின் மீது அமர்ந்திருக்கும் ஒரு பறவையின் வாயில் இருந்து குபுகுபுவென புகை வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.
பொதுவாக பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து ரசிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
இயற்கையோடு ஒன்றி வாழும் பறவைகளின் கொஞ்சல்களும்.. கீச் கீச் என்ற சத்தமும் பலரையும் மெய்மறந்து ரசிக்க வைக்கும்.

பறவைகளின் வித்தியாசமான செயல்கள்
கோழிக்குஞ்சுகள், கிளி, மைனா, காகம், குயில் என எந்த பாகுபாடும் இன்றி பறவைகளின் அத்தனை நடவடிக்கைகளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதுவும் கிராமப்புறங்களில் அதிகாலை வேளைகளில் கீச்சிடும் சத்தங்களே வாழும் சொர்க்கம் என்றே சொல்லும் அளவுக்கு இருக்கும். இதை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அதேபோல், இப்போது இணையத்திலும் பறவைகள் செய்யும் வித்தியாசமான செயல்கள் அவ்வப்போது பரவி நெட்டிசன்களை ரசிக்க வைக்கின்றன.

புகை விடும் பறவை
அந்த வகையில் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு பறவையின் வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதுவும் அந்த பறவை வாயில் இருந்து புகை விடுவது நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. என்னது பறவை புகை விடுகிறதா... என புருவத்தை உயர்த்தி படிப்பது தெரிகிறது.. ஆம்.. நீங்கள் நினைப்பது போல புகை அல்ல என்றாலும் பறவையின் வாயில் இருந்து புகை செல்வது போலவே நமது கண்ணுக்கு தெரிகிறது.

புகைப்பிடிக்கும் பறவை
ஆம் சில நொடிகளே ஓடும் அந்த வீடியோவில் மரத்தின் கிளையில் நின்று கொண்டு கீச் கீச் என்று விசிலடிப்பது போல் கூவுகிறது. வாயை திறந்து சத்தமாக கூவுகிறது. அப்போது அந்த பறவையில் வாயில் இருந்து குபு குபுவென புகை வருகிறது. இந்த வீடியோவை ரயில்வே அதிகாரி Ananth Rupanagudi என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புகைக்கும் பறவை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது இந்த பறவை.. என்னே அழகு!

உண்மையான பெயர் என்னவாக இருக்கும்
இந்த வீடியோவை பதிவிட்ட அவர் கேப்ஷனாக ''புகைப்பிடிக்கும் பறவையை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது... ஆஹா என்ன ஒரு அழகு... இவ்வளவு அழகான இந்த பறவையின் உண்மையான பெயர் என்னவாக இருக்கும்?.. உண்மையில் இந்த பறவை எப்படி அழைக்கப்படுகிறது'' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பார்வைகளையும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் வாரி குவித்துள்ளது. வீடியோவை பார்த்தநெட்டிசன்கள் பலரும் வியந்து ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நம்பவே முடியவில்லை என கருத்து
நெட்டிசன் ஒருவர் ஆஹா என்ன அழகு.. பறவையும் இப்போது புகைப்பிடிக்க தொடங்கி விட்டது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் 'உண்மையில் இது புகைப்பிடிக்கும் பறவை அல்ல.. ஆனால் குளிர்ந்த காலநிலையில் பறவையின் வாயிலிருந்து சூடான காற்று வெளியேறுகிறது' என்று விளக்கினார். மற்றொரு நெட்டிசன் ''ஓ மை கடவுளே.. இது ரொம்ப் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... சோ பியூட்டிபுள்... நம்பவே முடியவில்லை'' என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் இது பிரேசிலில் பரவலாக காணப்படும் பறவை என்றும் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications