மார்பகத்தை அழகாக காட்ட.. உயிரிழந்தோர் கொழுப்பை உடலில் செலுத்தி கொள்ளும் பெண்கள்.. வினோத டிரெண்ட்
வாஷிங்டன்: அழகை மேம்படுத்த இப்போது பல்வேறு வகையான சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. அப்படியொரு வினோதமான சிகிச்சை முறை தான் இப்போது அமெரிக்காவில் டிரெண்டாகி வருகிறது. உயிரிழந்தோரின் சடங்களில் இருந்து கொழுப்பை எடுத்து அதை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்வதே இந்த முறை. மிகவும் வினோதமான மற்றும் சர்ச்சைக்குரிய இந்த டிரெண்ட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் பெண்கள் தங்கள் மார்பகங்கள், இடுப்பு மற்றும் பின்புறத்தை அழகாகக் காட்டிக்கொள்ள, உயிரிழந்தோர் சடலத்திலிருந்து பெறப்பட்ட கொழுப்பை ஊசி மூலம் இந்தப் பாகங்களில் செலுத்திக் கொள்கிறார்களாம். இதை அவர்கள் ஃபில்லர்கள் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அமெரிக்காவில் ஒரு புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அழகுசாதன டிரெண்டாக உருவாகியுள்ளது.

வினோதச் சிகிச்சை முறை
அங்கு அழகு சாதனப் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனம் இதை விற்று வருகிறது. இப்படித் தான் அங்கு வசிக்கும் 34 வயதான நிதி துறை வல்லுநர் தனது இடுப்பு மற்றும் பின்புறத்தை அழகாக மாற்ற இதுபோல ஃபில்லர்களை பயன்படுத்தியுள்ளார். அங்கு ஒரு முறை இந்தச் சிகிச்சைக்குக் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் செலவழித்துள்ளனர்.
அதேநேரம் இது அங்கு சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. இதற்காகச் சில விரிவான விதிமுறைகள் உள்ள சூழலில், அதை எல்லாம் அவர்கள் முறையாகப் பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான ரூல்ஸ் இருப்பதால் இதில் மோசடிகள் நடக்காது என்றும் இந்த ஃபில்லர்கள் மறுசுழற்சி செய்யக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எப்படி?
உயிரிழந்த பிறகு சிலர் தங்கள் உடலை ஆய்வுக்காக ஒப்படைப்பார்கள். அப்படி ஆய்வுக்காகத் தங்கள் உடல்களை தானம் செய்தோரின் உறுப்பு மற்றும் திசுக்களில் இருந்து கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. பின்னர் அது கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, செல்லுலார் கொழுப்பு மேட்ரிக்ஸில் பதப்படுத்தப்படுகிறது. அதாவது அனைத்து டிஎன்ஏ மற்றும் உயிருள்ள செல்களும் அகற்றப்படுகின்றன.
பெரும்பாலும் மெலிதாக உள்ளவர்கள் நோயாளிகள், ஏற்கனவே லிபோசக்ஷன் செய்து கொண்டவர்கள், போதுமான கொழுப்பு இல்லாதவர்களுக்கும் இது செலுத்தப்படும். ஓசெம்பிக் மற்றும் மவுஞ்சாரோ போன்ற எடை இழப்பு மருந்துகளைப் பயன்படுத்திக் குறிப்பிடத்தக்க எடையைக் குறைத்தவர்களும் கூட தங்கள் உடலை அழகாகக் காட்டிக் கொள்ள இதைப் பயன்படுத்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டேரன் ஸ்மித் குறிப்பிடுகிறார்.
மயக்க மருந்து கூட தேவையில்லை
பாரம்பரிய அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் இந்த சிகிச்சை செய்வது ரொம்பவே ஈஸியானதாம். மயக்க மருந்து கூட இல்லாமல் சாதாரண கிளினிக்குகளிலேயே இந்த ஃபில்லர்கள் செலுத்தப்படுகிறது. இடுப்பு, பின்புறம், மார்பகங்கள் அல்லது தோள்களில் தான் இவை அதிகம் பயன்படுத்தப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்..
இது தொடர்பாக மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "வழக்கமான அழகு சார்ந்த அறுவை சிகிச்சையை விட இது காஸ்ட்லி தான். ஆனால், இது எளிமையானது. ஆபரேஷன் தேவையில்லை.. மயக்க மருந்து தேவையில்லை. தீவிரமான மருத்துவ நடைமுறைகள் தேவையில்லை. இதனால் இந்த வசதிக்காகவே மக்கள் அதிகத் தொகையைக் கட்டணமாகச் செலுத்துகிறார்கள்" என்றார்.
எவ்வளவு செலவு?
இந்த வகைச் சிகிச்சை இப்போது தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எவ்வளவு ஃபில்லர்கள் செலுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து $10,000 முதல் $100,000 வரை, அதாவது 9 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை கூட கட்டணமாக வசூலிக்கிறார்களாம்.!
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
Optical illusion: நீங்க அதிபுத்திசாலியா.. படத்தில் எந்த டேங்க் முதலில் காலியாகும்? 8 செகண்டுக்குள் கண்டுபிடிங்க! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது











Click it and Unblock the Notifications