'எங்கே போவது.. என்ன செய்வது'.. ஒரு நிமிடம் மேடையில் குழம்பி போய் நின்ற ஜோ பைடன்.. பரவும் வீடியோ!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிறகு என்ன செய்வது எங்கே செல்வது என்று மேடையில் தடுமாறும் வகையில் நிற்கும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிக வயது கொண்ட அதிபர் ஜோ பைடன் தான்.

ஜோ பைடன்
உலக வல்லரசு நாடாக திகழும் நாட்டின் அதிபராக விளங்கும் ஜோ பைடன், 79-வயது ஆனாலும் சிறப்பாகவே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற Global Fund's Seventh Replenishment Conference- நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோ பைடன் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிறகு, மேடையில் இருந்து இறங்குவதற்காக திரும்பினார்.

திகைத்து போய் நின்றார்
ஆனால், அப்படியே நின்ற ஜோ படைன் எங்கு செல்வது என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தார். ஜோ படைன் சில வார்த்தைகளை உச்சரித்ததையும் காண முடிந்தது. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தவர்கள் பலர் கைதட்டிக் கொண்டு இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது கேட்கவில்லை. மேடைக்கு வலது பக்கமாக திரும்பிய ஜோ பைடன், இந்த வழியாகத்தான் இறங்க வேண்டுமா? என்பது போல திகைத்து நின்றார்.

இணையத்தில் டிரெண்ட்
அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஜோ பைடனுக்கு நன்றி கூறி பேசியதால் டக்கென்று ஜோ பைடன் உஷாராகி அதை கவனிக்கத் தொடங்கிவிட்டார். மேடையில் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் ஜோ பைடன் நிற்கும் காட்சிகள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. பலரும் ஜோ பைடனின் நடவடிக்கை அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

இது முதல்முறையல்ல
ஜோ பைடன் இப்படி நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோ பைடன் தனது உரையை முடித்துவிட்டு யாரும் இல்லாத பக்கத்தில் வெறுமனே கை குலுக்கினார். காற்றுடன் கை குலுக்குகிறார் என்று ஜோ பைடனை நெட்டிசன்கள் விமர்சித்து இருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications