Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் விஸ்வரூபம்- ஒரே நாளில் 71,809 பேருக்கு கொரோனா பாதிப்பு- 1,563 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் திடீரென கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 71,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 1,563 பேர் கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்ட போதும் கொரோனா பாதிப்பு தொடருகிறது.

அமெரிக்காவில் நேற்று ஒருநாள் மட்டும் 71,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,996,507.

1,563 பேர் மரணம்

1,563 பேர் மரணம்

அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று மட்டும் 1,563 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 748,652 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று 136,821 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மொத்தம் 35,710,331 பேர் குணமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் பாதிப்பு அதிகம்

இங்கிலாந்தில் பாதிப்பு அதிகம்

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் 43,738 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,541,192. அந்நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று 223 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ரஷ்யாவில் மரணங்கள் அதிகம்

ரஷ்யாவில் மரணங்கள் அதிகம்

ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து 1,000-த்தை தாண்டியதாக உள்ளது. ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,740 ஆக பதிவாகி உள்ளது. ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,015 ஆகும். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,060,752. ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 225,325. ரஷ்யாவுக்கு அடுத்ததாக ருமேனியாவில் 561 பேரும் உக்ரைனில் 538 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் பாதிப்பு குறைவு

இந்தியாவில் பாதிப்பு குறைவு

ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 7-வது இடத்தில் உள்ளது. ஒருநாள் கொரோனா மரணங்கள் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14,623 ஆகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 197 ஆகவும் பதிவாகி உள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஈரான் உள்ளது. ஈரானில் நேற்று கொரோனாவால் 167 பேர் உயிரிழந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+