பைடன் vs ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்.. இந்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் இடைக்காலத் தேர்தலானது அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் நேரடியாக மோதும் களமாக மாறியுள்ளதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல், அதிபர் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டெல்லி தீவிரமாக கவனித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இடைத்தேர்தல்

அமெரிக்க இடைத்தேர்தல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்தான் நடந்து முடிந்து விட்டதே.. பின்னர் என்ன இது மற்றொரு தேர்தல்? என சிலருக்கு சந்தேகம் இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை, அதிபர் பதவிக்கும், நாடாளுமன்றத்துக்கும் தனித்தனியே தேர்தல் நடைபெறும். அதிபர் தேர்தலுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது என்றால், நாடாளுமன்றத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதைதான் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் எனக் கூறுகிறோம். அதிபர் தேர்தல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த இடைக்காலத் தேர்தல். தற்போது இந்தத் தேர்தல்தான் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

எத்தனைத் தொகுதிகள்?

எத்தனைத் தொகுதிகள்?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் (மக்களவை) மொத்தமுள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேலவை) 35 இடங்களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே மேலவையில் குடியரசுக் கட்சிக்கு அதிக இடம் உள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையையும் கைப்பற்ற தீவிர முயற்சியில் குடியரசுக் கட்சி ஈடுபட்டு வருகிறது.

 மீண்டும் பைடன் vs ட்ரம்ப்..

மீண்டும் பைடன் vs ட்ரம்ப்..

இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அதிபர் ஜோ பைடன் தலைமையில் களம் இறங்க., குடியரசுக் கட்சி வேட்பாளர்களோ முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் களம் காண்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றினால், 2026 அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் நிச்சயம் போட்டியிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, வரும் 15-ம் தேதி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 15-ம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. எனவே, இந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் ஜோ பைடனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், ஆட்சியில் இருக்கும் கட்சி எதுவாக இருந்தாலும், அது பெரும்பாலான தொகுதிகளை இழக்கும் என்பதே வரலாறு கூறும் உண்மை. இந்த விதிக்கு தற்போதைய தேர்தலும் விதிவிலக்கு அல்ல என்றே அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும், ஜோ பைடனின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே, பழைய வரலாறை உடைத்தெறிந்து, ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தை கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர். ஒருவேளை, இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுவிட்டால், பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது. ஜோ பைடன் ஆட்சி சுலபமாக இருக்கும். ஆனால், குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், அது ஜோ பைடனின் ஆட்சிக்கு மிகுந்த குடைச்சலை கொடுப்பதாக ஆகிவிடும். பைடனை பதவி நீக்கம் செய்யும் வரை குடியரசுக் கட்சி எம்பிக்கள் செல்வார்கள் என கூறப்படுகிறது.

இந்தியாவில் எத்தகைய தாக்கம்?

இந்தியாவில் எத்தகைய தாக்கம்?

அமெரிக்க இடைத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், இந்தியா உடனான உறவில் எந்த பாதிப்போ தாக்கமோ அதிகமாக இருக்காது. ஏனெனில், ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் இந்தியாவுடன் இணக்கமான உறவையே பேண விரும்புகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, தற்போது அமெரிக்காவிடம் இருந்து தற்போது எந்த பெரிய உதவியையும் எதிர்பார்க்கவில்லை.

பாகிஸ்தானுடன் நெருக்கம்

பாகிஸ்தானுடன் நெருக்கம்

அதே சமயத்தில், ஜோ பைடனையும், டொனால்ட் ட்ரம்ப்பையும் ஒப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தது ட்ரம்ப் தான். ஜோ பைடனின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா சற்று நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்களை வாங்குவது பைடனுக்கு சற்று அதிருப்தியை தந்துள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவை நேரடியாக பகைக்க பைடன் விரும்ப மாட்டார் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் இந்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+