வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'புதிய சகாப்தம்..'விண்டோஸ் பயனாளரா நீங்கள்? அட்டகாசமான டிசைனில் வெளியான விண்டோஸ் 11..' ஏன் முக்கியம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புதிய ஸ்டார்ட் மெனு உடன் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் புதிய விண்டோஸ் 11 பதிப்பு இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

கணினிகளில் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கும் உள்ள கணினிகளில் சுமார் 70% மேல் விண்டோஸ் இயங்குதளமே பயன்படுத்தப்படுகிறது.

இந்தச் சூழலில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் புதிய விண்டோஸ் 11 பதிப்பு இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயனாளர்களின் யூஸேஜ்யை எளிமையாக்கும் வகையில் புதிய ஸ்டார்ட் மெனு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 மருத்துவ படிப்பில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய இடையீட்டு மனு மருத்துவ படிப்பில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய இடையீட்டு மனு

விண்டோஸ் 11

விண்டோஸ் 11

விண்டோஸ் 10 பயனர்கள் அனைவருக்கும் விண்டோஸ் 11 அப்டேட் இலவசமாக வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் கூறுகையில், "விண்டோஸ் 11 சமீபத்திய பதிப்பு அனைவருக்கும் புதிய மற்றும் எளிமையான ஒரு அனுபவத்தைத் தரும். இந்த புதிய இயங்குதளம் பழைய முறையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்காது.

எளிமையாக இருக்கும்

எளிமையாக இருக்கும்

விண்டோஸ் இயங்குதளத்தின் பழைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோருக்கு இதைப் பயன்படுத்த எளிமையாகவே இருக்கும். அனைத்து வயதினரும் பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்த இந்த இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார். விண்டோஸ் 11 சோதனை ஓட்டத்தில் இந்த இயங்குதளம் விரிவாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்று நம்புவதாக பனோஸ் கூறினார்.

ஸ்டார்ட் பட்டன்

ஸ்டார்ட் பட்டன்

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 11 சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயல்பாக, ஸ்டார்ட் மெனு டாஸ்க்பாரில் உள்ள ஐகான்களுடன் திரையில் மையமாக இருக்கும். ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்யும் போது, அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளின் பட்டியல் மெனுவில் தோன்றும். விண்டோஸ் 11இல், ஸ்டார்ட் பட்டன் திரையின் நடுவில் இருக்கிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

விண்டோஸ் 10இல் காணப்படும் டைல்ஸ்களை 11இல் மைக்ரோசாஃப்ட் கைவிட்டுள்ளது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் ஸ்டார்ட் மெனு முற்றிலுமாக விடுபட்டிருந்தது என்றும் இது பல பயனர்களை வருத்தப்படுத்தியதால் அந்த தவற்றை மைக்ரோசாஃப்ட் திருத்திக் கொண்டுள்ளதாகவும் பனோஸ் தெரிவித்தார். இந்த விண்டோஸ் 11 புதியதொரு சகாப்தத்தைப் படைக்கும் என்றும் பனோஸ் பனாய் தெரிவித்தார்.

English summary
Windows 11 the latest version of Microsoft's computer operating system. latest version of Microsoft Windows 10 users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X