For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 புதுமுகங்கள்.. ஒரு ஜாம்பவான்.. கூடவே பாமகவும்.. அனல் பறக்கப் போகும் மத்திய சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய சென்னை தொகுதி வித்தியாசமான களமாக மாறியுள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. வழக்கம் போல தயாநிதி மாறனே இங்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு போயுள்ளது. எனவே பாமக வழக்கம் போல வாக்குகளைப் பிரிக்க முயலும்.

இன்னொரு முனையில் இரு முக்கிய புதுமுகங்கள் களம் கண்டுள்ளனர். ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமீலா நாசர். மற்றொருவர் எஸ்டிபிஐ கட்சியின் தெஹலான் பாகவி.

<strong>வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்? </strong>வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?

முதல் முறை போட்டி

முதல் முறை போட்டி

தெஹலான் பாகவி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அதேபோல கமீலா நாசரும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர்கள் முஸ்லீம்களின் வாக்குகளை எந்த அளவுக்கு தங்கள் பக்கம் ஈர்த்து, திமுக, பாமகவுக்கு சிக்கல் தரப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரியது.

இன்று இரவு 7 மணி

இன்று இரவு 7 மணி

தெஹலான் பாகவியின் பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்று இரவு 7 மணிக்குத்தான் பாகவி பெயரை எஸ்டிபிஐ கட்சி அறிவிக்கவுள்ளது.

நகர்ப்புறம்

நகர்ப்புறம்

மத்திய சென்னையில் இஸ்லாமிய வாக்குகள் கணிசமாக இருப்பதாலும், நகர்ப்புற மேல்தட்டு மக்களும் கணிசமாக இருப்பதாலும் இந்தத் தொகுதியை நைஸாக எஸ்டிபிஐ பக்கம் தள்ளி விட்டு விட்டாராம் டிடிவி.

 கடுமையாக பிரியும்

கடுமையாக பிரியும்

பாகவி, கமீலா நாசர் ஆகியோரின் போட்டியால் நிச்சயம் இத்தொகுதியில் வாக்குகள் கணிசமாக பிரியும் என்கிறார்கள். அது யாருக்கு பாதிப்பைத் தரப்ப போகிறது, திமுகவுக்கா அல்லது பாமகவுக்கா என்பதுதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

English summary
A four corner contest is awaiting in Central Chennai as DMK, PMK, MNM and SDPI are clashing here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X