தீபாவளி..கந்த சஷ்டி..பவுர்ணமி அன்னாபிஷேகம்..ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்
சென்னை: ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது.
ஐப்பசியில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
ஐப்பசி : 1 விஷு புண்ணிய காலம், துலா ஸ்நானம் ஆரம்பம், ராதா ஜெயந்தி
ஐப்பசி : 6 தன்வந்திரி ஜெயந்தி நரக சதுர்த்தசி ஸ்நானம்.
ஐப்பசி : 7 தீபாவளி, லட்சுமி குபேர பூஜை.
ஐப்பசி : 8 கேதார கௌரி விரதம், சூரிய கிரகணம்.
ஐப்பசி : 9 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம், யமத்துவிதியை.
ஐப்பசி : 13 கந்த சஷ்டி சூரசம்காரம்
ஐப்பசி : 16 அட்சய நவமி.
ஐப்பசி : 21 அன்னாபிஷேகம், குருநானக் ஜெயந்தி.
ஐப்பசி : 22 சந்திர கிரகணம்.
ஐப்பசி : 30 துலா ஸ்நான பூர்த்தி.

தேய்பிறை ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும். இந்த ஆண்டு ஐப்பசி 3ஆம் தேதி இந்திர ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது.

கோவத்ச துவாதசி
இம்மாதத்தில்,தேய்பிறையில் வரும் துவாதசி, கோவத்ச துவாதசி ஆகும். அன்றைய தினம், மாலை நேரத்தில் பசுவையும், கன்றையும், உணவு கொடுத்து, பூஜித்து வழிபட்டால், வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி தன திரயோதசியாகவும், சதுர்த்தசி நரக சதுர்த்தசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி அமாவாசை முன்னோர் வழிபாடு செய்ய ஏற்ற நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி 6 ஆம் தேதி தன்வந்திரி ஜெயந்தி நரக சதுர்த்தசி ஸ்நானம். ஐப்பசி ஆம் தேதி 7 தீபாவளி, லட்சுமி குபேர பூஜை. ஐப்பசி அமாவாசை ஐப்பசி 8 கேதார கௌரி விரதம், சூரிய கிரகணம்.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். ஐப்பசி 13 சூரசம்ஹாரம்.

ஐப்பசி சதயம்
ஐப்பசி 16 அட்சய நவமி கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வளர்பிறை ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்.

ஐப்பசி பவுர்ணமி
ஐப்பசி 21 அன்னாபிஷேகம். சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம். ஐப்பசி 22 பௌர்ணமி நாளில் சந்திர கிரகஹணம் நிகழ்கிறது.

ஐப்பசி கடைமுகம்
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். நம்முடைய பாவங்கள் கரைந்தோடும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications