Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம்புகள் பழிவாங்குமா? கனவில் அடிக்கடி வந்தால் என்ன பலன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பு அடிக்கடி கனவில் சிலரை தொல்லை படுத்தும். பாம்பை அடிக்கடி கனவில் கண்டால் நாகம்மன் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். குல தெய்வ வழிபாட்டில் குறை இருந்தாலும் பாம்பு கனவு வருமாம். பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பது நம்பிக்கை.

பாம்பு கடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்பதால் பாம்பு மீதான பயணம் அதிகமாகவே உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அரவிந்த் மிஸ்ரா, கோவிந்த் மிஸ்ரா என்ற அண்ணன் தம்பிகள் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். ஏதோ சாபம் காரணமாகவே பாம்பு கடித்து அவர்கள் உயிரிழந்து விட்டதாக கிராமத்தினர் கூறுகின்றனர். சிலருக்கு பாம்புகள் பழிவாங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. பாம்பு கடி மரணங்களில் பாதிக்கும் அதிகமானவை இந்தியாவில்தான் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நாகம் வழிபாட்டுக்கு உரியதாக நம் நாட்டில் உள்ளது. சிவபெருமான் தனது கழுத்தில் நாகாபரணம் அணிந்துள்ளார். முருகன் தன்னிடம் நாகத்தை வைத்துள்ளார். அம்மன்கள் நாகத்தை தலையில் சூடியிருப்பார்கள். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். நம்முடைய கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பாம்புகளை கொன்ற தோஷம்

பாம்புகளை கொன்ற தோஷம்

பாம்புகளைப் பார்த்தாலே சிலர் பயத்தில் அடித்து கொன்று விடுவார்கள். பாம்புகளை கொன்ற தோஷம் பல ஆண்டுகள் தொடர்ந்து வரும். தலைமுறைக்கும் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். தோஷங்கள் நீங்கவும், பாம்புகளால் ஏற்பட்ட சாபம் நீங்கவும் நாக பஞ்சமி, கருட பஞ்சமி நாளில் பாம்புகளை வழிபடுகின்றனர். நாக தோஷம் இருப்பவர்களுக்கு திருமணத்தடை, புத்திரபாக்கியத்தடை நீங்கும்.

குல தெய்வம் உணர்த்தும் உண்மை

குல தெய்வம் உணர்த்தும் உண்மை

பாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதுநாள் வரை குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால், குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். நம்முடைய குல தெய்வம் கூட நாக வடிவத்தில் கனவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும். வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெறலாம்.

 தோஷம் நீங்கும் ஐஸ்வர்யம் சேரும்

தோஷம் நீங்கும் ஐஸ்வர்யம் சேரும்

பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

ஆபத்து விலகும்

ஆபத்து விலகும்

கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம். ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும்.

தலைக்கு மேல் பாம்பு

தலைக்கு மேல் பாம்பு

நாகப்பாம்பு நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+