உங்கள் குல தெய்வத்தை இப்படி கும்பிடுங்கள்... துன்பம் தொலைந்தது இப்போ என்று பாடுவீர்கள்
நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சீக்கிரமே முன்னேறி விடுவீர்கள்.
சென்னை: கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கவலையில் இருக்கிறீர்களா? உங்கள் குல தெய்வத்தை மனம் உருகி கும்பிடுங்கள். துன்பம் தொலைந்து இப்போ என்று மகிழ்ச்சியோடு பாடுவீர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களின் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கத் தொடங்கும்.
சிலர் தின கூலிக்கு வேலை செய்வார்கள்... சிலரோ வார சம்பளம் வாங்கி காலம் கடத்துவார்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத சம்பளம் வாங்குவார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் சிலர் கையில் பைசா தங்காது. சம்பாதிக்கும் பணம் மொத்தமும் கைக்கும் வாய்க்குமே சரியாக இருக்கும். இதற்குக் காரணம் கஷ்டம் அவர்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கும்.
உங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் காவல் தெய்வம் ஒன்று உண்டு என்றால் அது குல தெய்வம் மட்டுமே. குல தெய்வத்தை மறக்காதவர்களுக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். மாசிமகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் நாட்களில் மட்டுமே குல தெய்வத்தை கும்பிடவேண்டும் என்பதில்லை. வாரம் ஒருமுறை உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சீக்கிரமே முன்னேறி விடுவீர்கள்.

தாமரைப்பூ அர்ச்சனை
உங்களுடைய குல தெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு வாரம் 1 முறை தாமரை பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். ரொம்பவும் வறுமையில் இருப்பவர்கள் மாதம் 1 தாமரைப்பூவை மட்டுமாவது உங்களுடைய குல தெய்வத்திற்கு வாங்கிக் கொடுத்து அந்தத் தாமரை பூவினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொஞ்சம் வசதி வாய்ப்பு உடையவர்கள், 21, 51 என்ற எண்ணிக்கையில் குலதெய்வ கோவிலுக்கு தாமரைப் பூவை வாங்கி கொடுப்பது மிக மிக விசேஷமான பலன்களை கொடுக்கும்.

குங்கும அர்ச்சனை குலம் காக்கும்
குலம் செழிக்க குங்கும அர்ச்சனை குலதெய்வத்திற்கு செய்துவர வேண்டும். உங்கள் குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் குங்குமத்தை வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக தரலாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு மேலே சொன்ன இரண்டு விஷயங்களை பின்பற்றி வாருங்கள்.

வறுமைகள் ஓடிப்போகும்
வாரத்தில் ஒரு நாள் தாமரைப்பூ வாங்கிக் கொடுத்தால், அடுத்த வாரம் ஒருநாள் குங்குமம் வாங்கி கொடுக்கலாம். இப்படி மாற்றி மாற்றி இரண்டு பொருட்களையும் தொடர்ந்து குலதெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுக்கும் போது உங்களின் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த வறுமைகள் ஓடிப்போகும். எத்தனை நாட்கள் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. உங்களின் வசதி வாய்ப்புக்கு ஏற்ப வாங்கித்தரலாம்.

விடியல் பிறக்கும்
உங்களுடைய குல தெய்வம் வெகு தொலைவில் இருந்தால் வீட்டில் குலதெய்வத்தின் படத்திற்கு தாமரைப்பூ வாங்கி வைத்து வழிபடலாம். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவில்களுக்கு தாமரை பூவையும் குங்குமத்தையும் வாங்கி கொடுக்கலாம். குல தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு கூடிய சீக்கிரம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

கடன் பிரச்சினை தீர வழிபாடு
சிலருக்கு ஓயாத கடன் பிரச்சினை இருக்கும். அவர்கள் பவுர்ணமி நாளில் குல தெய்வ படத்தின் முன்பாக ஐந்து முக விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து படையல் போட்டு வணங்க வேண்டும். கடன் பிரச்சினைகள் முழுவதுமாக தீர வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும். உங்கள் கடன் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications