Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி எப்பொழுது தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும்.. வைகோ பேட்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை:தமிழகத்துக்கு மோடி எப்போது வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலளார் வைகோ கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக அரசு அமைந்தால் நல்லது என்று கூறிய வைகோ. 2014ம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.பின்னர் குறுகிய காலத்தில் அந்த கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்தார்.

மத்தியில் செயல்படும் பாஜக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்றும் வைகோ கூறி வருகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல தருணங்களில் போராட்டங்களையும் அறிவித்து நடத்தியுள்ளார்.

பேட்டியளித்தார் வைகோ

பேட்டியளித்தார் வைகோ

இந் நிலையில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி எப்போது வந்தாலும் கருப்புக் கொடி காட்டப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கு

ஸ்டெர்லைட் வழக்கு

அவர் மேலும் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்கவில்லை. நேற்றைக்கு உச்சநீதி மன்றத்தில் நான் பங்கேற்றேன்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லி உத்தரவு வந்தது போல் தவறான செய்தி வந்துள்ளது.

தடையை நீக்கி உத்தரவு

தடையை நீக்கி உத்தரவு

மதுரை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தடையை நீக்கி விட்டார்கள் அவ்வளவு தான். அதே நேரத்தில் ஆலையைத் திறப்பது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தமிழ்நாடு அரசும் கொள்கைகளை எந்த அளவு நிறைவேற்றி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

விசாரணை எப்போது?

விசாரணை எப்போது?

பசுமை தீர்ப்பாயம் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த விசாரணை எப்போது வரும் என்று தெரியாது. அரசியல் சட்டத்தில் 16, 17 பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பொருளாதார அடிப்படையில் இதை சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஓட்டுகளை வாங்கும் முயற்சி

ஓட்டுகளை வாங்கும் முயற்சி

3 மாநில படுதோல்விக்கு பின்னர், அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட வேறு வகுப்பு பிரிவினரின் ஓட்டுகளை பெற பாஜக முயற்சிக்கிறது. அதற்காக, இந்த திருத்தத்தை 15, 16 உட்பிரிவு சேர்த்து 10% கொடுத்துள்ளனர். இதனை சில கட்சிகள் வரவேற்று உள்ளனர். அதை விமர்சிக்க விரும்பவில்லை.

கருப்புக்கொடி காட்டப்படும்

கருப்புக்கொடி காட்டப்படும்

இந்த சமூக நீதியை கொண்டுவந்தது தமிழ்நாடு. எனவே கடைசியாக ஆட்சியை இழந்து போகிற போக்கில் மோடி அரசு எப்படி எல்லாம் வஞ்சகம் செய்யலாம் என்பதை என்று பார்க்கிறது. தமிழ்நாட்டிற்கு மோடி என்று வந்தாலும் என் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும்." என்று வைகோ கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+