"கொஞ்சம் நில்லுங்கப்பா.. நானும் வாரேன்".. வேனுக்குள் நுழைய முயன்ற யானை.. தீயாய் பரவும் வீடியோ!
டெல்லி: வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் ஒரு வேனை திடீரென மறித்து யானை ஒன்று தன் தும்பிக்கையால் 'கொஞ்சம் நில்லுங்கப்பா நானும் வர்ரேன்' என்று தொனியில் கூறிவிட்டு வேன் கதவினை திறக்க முயலும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மலைப்பாதைகள், வனப்பகுதிகள் வழியாக வாகனங்களில் செல்லும் போது வன விலங்குகள் சாலையை கடந்து செல்வதும்.. சில நேரங்களில் சாலைகளில் நடமாடுவதுமான செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
குறிப்பாக யானைகள் இப்படி கூட்டமாக சாலையை கடப்பதும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நிற்பது போன்ற பல வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி இணையத்தில் பரவும்.

சாலையில் யானைகள்
பெரும்பாலும் யானை உள்பட எந்த விலங்குகளும் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கும் இயல்பை கொண்டது இல்லை. சாலைகளில் வந்தால் கூட தானாக சென்று விடும். செல்ஃபி எடுப்பது ஹார்ன் அடித்து தொந்தரவு செய்தால் தான் கோபம் அடைந்து தாக்கும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் சொல்கிறார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக செல்லும் சாலைகளில் அடிக்கடி யானைக்கூட்டங்கள் லாரிகளை மடக்கி கரும்பை சாப்பிடும் செய்திகள் கூட நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனாலும் பெரிய அளவில் வாகன ஓட்டிகளை துன்புறுத்தாமல் யானைகள் கடந்து சென்றுவிடும்.

கொஞ்சம் நில்லுங்கப்பா நானும் வர்ரேன்
இந்த நிலையில், வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் சென்று கொண்டிருக்கும் வேன் ஒன்றை வழிமறித்து அதை யானை இடித்து தள்ளும் ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெறும் 14 நொடிகளே ஓடக்கூடிய இந்த வீடியோவில், நெடுஞ்சாலை ஒன்றில் வேன் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே வரும் யானை ஒன்று 'கொஞ்சம் நில்லுங்கப்பா நானும் வர்ரேன் என்பது போல' அந்த வேனை நிற்குமாறு தன் தும்பிக்கையால் பாவனை செய்கிறது.

முட்டி தள்ளிய யானை
வேன் டிரைவரும் பயந்து போய் யானை சிறிது தூரத்தில் வரும்போது வேனின் வேகத்தை குறைத்துவிடுகிறது. இதற்கிடையே தான் நிறுத்துமாறு கூறியதால் தான் வேன் நின்றுவிட்டதுபோல என நினைத்து யானை வேன் கதவை திறக்க தன் தும்பிக்கையால் இழுக்கிறது. கதவு திறக்காததால் கதவினை முட்டி தள்ள முயற்சிக்கிறது. ஆனாலும் கதவு திறக்கவில்லை. யானை இப்படி முட்டுவதை பார்த்ததும் வேன் டிரைவர் வேகத்தை அதிகரித்து சென்று விடுகிறார். இதனால் யானை வேறு ஒன்றும் செய்யாமல் திரும்பி சென்று விடுகிறது.

யானையால் ஏற முடியவில்லை
இதினால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் இன்றி வேன் யானையை கடந்து சென்று விடுகிறது. இந்த வீடியோவை உமாசங்கர் சிங் என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். பல லட்சம் பார்வையாளர்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவோடு டாடா பேருந்தின் கதவு மிகவும் சிறியதாக இருக்கிறது. பெரிய யானையால் ஏற முடியவில்லை என்ற பொருளில் கேப்ஷனும் போட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

தீபாவளி விடுமுறைக்கு...
இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ராதான் இந்த வீடியோவை முதல் முதலாக தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில், ''தீபாவளி விடுமுறைக்கு அனைவரும் விரைவாக வீடு போய் சேர வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர்'' என்று கேப்ஷனும் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவிற்கு ஜாலியாக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications