முதல் வாரத்தில் எதிர்பார்க்காத டாப் 10 சீரியல்கள்.. முன்னேறிய எதிர்நீச்சல் பின் தங்கிய பிரபல சீரியல்
சென்னை: தொலைக்காட்சிகளில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து டிஆர்பி யில் அதிக எண்ணிக்கையை பெற்ற முன்னணி சீரியல்களின் டாப் 10 விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட சீரியல்களின் அடிப்படையில் இந்த விபரம் எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் வெளியான லிஸ்ட்க்கும் இந்த வாரம் வெளியேற்ற லிஸ்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு அடுத்தடுத்ததாக கடந்த வாரத்தில் அதிகமான பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று கயல் ஜெயித்த எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11.52 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2.வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் பொன்னியின் மனமாற்றம் சின்ராசுவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என பரபரப்பான எபிசோடுகளின் காரணமாக இந்த சீரியல் 10.54 அளவைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, சுந்தரி சீரியல்
சுந்தரி சீரியலில் சுந்தரிக்கு கண் பார்வை இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் கார்த்தி சுந்தரிக்காக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இந்த சீரியல் 10.30 பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது

4, எதிர் நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் சொந்த ஊருக்கு வீட்டு மருமகள் அனைவரும் சென்றிருக்கும் நிலையில் ஆதிரையின் காதல் ரகசியங்கள் குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இந்த சீரியல் 9.48 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருந்தாலும் தற்போது இந்த சீரியல் பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறதாம்.

5, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடங்கிய இரண்டு வாரங்களிலேய ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் இனியாவை பழிவாங்குவதற்காக திருமண நாடகம் நடைபெறுவதால் இந்த சீரியல் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான வரவேற்பால் 9.45 ஒரு பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6,கண்ணான கண்ணே
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் ஆரம்பத்தில் தன்னுடைய மகள் மீராவை ஏற்றுக் கொள்ளாத கௌதம் தற்போது தான் மனம் திருந்தி மீராவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சாமியார் சொன்னதற்காக மீரா தன்னுடைய தந்தையை பிரிந்து செல்கிறார். இந்த பரபரப்பான திருப்பங்களால் இந்த சீரியல் 9.32 பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, ஆனந்த ராகம் சீரியல்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனின் மனைவி யார் என்ற விறுவிறுப்பான எபிசோடுகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பானதால் இந்த சீரியல் டிஆர்பி யில் 7.94 அளவை பெற்றிருக்கிறது.

8, பாரதிகண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த டி என் ஏ டெஸ்ட் முடிவு வெளியான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து 7.54 அளவைப் பெற்று எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

9, பாக்கியலட்சுமி சீரியல் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் ஏரியா தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்த நிலையில் அதைக் குறித்து பல திருப்பங்கள் வந்தபோதிலும் இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 7.48 பெற்றிருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் சூப்பர் மார்க்கெட்டை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மூடிவிட்ட பிறகு அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி அளவில் 6.72பெற்றிருக்கிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications