புத்திசாலி என்று என்னை எதுக்கு தள்ளி வைக்கிறிங்க...கொதிக்கும் அபிஷேக்
சென்னை: தான் செய்ததை தவறு என சுட்டிக்காட்டிய இமான் அண்ணாச்சியின் மீது அபிஷேக் வார்த்தைகளால் எகிறிப் பாய்ந்து வருகிறார்.
பேசிக்கிட்டே இருக்கீங்களே எப்போ செயலில் காட்ட போறீங்க என்று ரசிகர்களின் கேள்விக்கு என்று கச்சேரியை தொடங்கிவிட்டார்கள்.
தான் செய்வதுதான் சரி என்பதை சக போட்டியாளர்கள் புரிந்து கொள்ளாததால் தான் அபிஷேக் இந்த மாதிரி எல்லாம் பேசுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரச்சனை தொடங்கியாச்சு
நேற்றைய எபிசோடில் அபிஷேக் எலிமினேஷன் ஆகவில்லை என்பது தெரிந்ததும் அவருடைய வெறித்தனமான ஆட்டம் தொடங்கி விட்டது போல, இன்றைய ப்ரோமோவில் அவருடைய ஹெவி பர்பாமன்ஸ் தான் ஹைலைட்டாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரச்சினையை கிளப்பி பிரச்சனை நடக்கும் இடங்களிலும் தவறாமல் அபிஷேக் இடம் பெற்று விடுகிறார். இது இவருடைய நெகட்டிவர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது. இவர் என்ன செய்தாலும் கலாய்க்கும் ரசிகர்கள் இப்போ இவர் பேசிய வார்த்தைகளை கலாய்த்து மீம்ஸ்களாக பறக்கவிட்டு வருகிறார்கள்.

இந்த வார தலைவர் பதவி டாஸ்க்
அபிஷேக் ராஜா என்னும் ஒரு போட்டியாளர் தான் இந்த வீட்டுக்குள் அனைத்து பர்பாமன்ஸ் ஹெவியாக செய்து கொண்டிருக்கிறார் போல, அதனால்தான் அவரை ப்ரோமோவில் எப்போதுமே காட்டி விடுகிறார்கள் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் விஜய் டிவியை வறுத்து எடுத்துக் கொண்டிரக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிக்பாஸ் உள்ளே நடப்பதை வேற லெவல் வெளிக்காட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது இந்த வார தலைவர் பதவிக்கு போட்டி போடுபவர்களை எப்படியும் சிரிக்க வைத்து விட வேண்டும் என்று வெறித்தனமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் அபிஷேக்.
Recommended Video

அட்வைஸ் செய்த அண்ணாச்சி
சிரிக்க வைக்க வேண்டும் என்றால் போட்டியில் உண்மையாக விளையாட வேண்டும் தங்களுடைய குடும்ப கஷ்டங்களை கூறக்கூடாது என்று அண்ணாச்சி கூறிய வார்த்தையை கேட்டதும் கடுப்பான அபிஷேக் தன்னுடைய பேச்சுக்கு எதிர் பேச்சா!!??என்று நினைத்தது போல கடுப்பாகி விட்டார். அண்ணாச்சிக்கு போட்டியாக இவர் கர்ஜிக்கும் குரல் தான் பிக்பாஸ் வீடு முழுக்க கேட்டுக் கொண்டிருக்கிறது. தான் இல்லை என்றால் விளையாட்டே இல்லை என்பதுபோல அபிஷேக் நடந்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அண்ணாச்சியை பார்த்து நீங்க தான் குரூப்ஸ் சேக்கிறீங்க. உங்களுக்கு தான் ராஜு முக்கியம், நான் முக்கியம் இல்லன்னா பரவாயில்ல என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

எதுக்கு இவ்வளவு கோபம்
எனக்கு வேலை இருக்கு இப்ப வேணாலும் நான் வீட்டுக்கு போனாலும் சந்தோசமா போவேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். இவர் பேசும் போது சக போட்டியாளர்கள் இவருடைய முகத்தையே உற்று பார்த்தவாறு அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். விளையாடாமல் இது என்ன சின்னப்புள்ளத்தனமா சண்டை போட்டு கொண்டு இருக்கீங்க. எப்படியும் அடுத்த வாரம் வெளியே கிளப்பி விடுவார்கள் என்பதற்காக இந்த வார தலைவர் பதவியில் தான் ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் அபிஷேக் இப்பிடி கத்திக்கொண்டு இருக்கிறாரா?? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications