தந்தையின் அஸ்தியை கரைக்க யாரும் எதிர்பார்க்காத இடத்துக்கு சென்ற அபிஷேக்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக் ராஜா சென்ற இடத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிறகு கண்டெண்ட்க்கு பஞ்சம் ஆகிவிட்டது என்று நெட்டிசன்கள் ஒரு பக்கமாக கலாய்த்து வருகின்றனர்.
பெரிய பேக்கை சுமந்தபடி இவர் மலைப்பிரதேசங்களில் சுற்றி திரிவதை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

மனதில் பதிந்த போட்டியாளர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன் களை முடிவடைந்து 5 வது சீசனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாளும் இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடுகின்றனர். இவர்கள் பாசிட்டிவ் கமெண்டுகளால் பிரபலமானதை விடவும் நெகட்டிவ் கமெண்ட் களால் ரொம்பவே பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதுவும் பெயரைச் சொன்னதுமே சட்டென்று நினைவுக்கு வருமளவுக்கு ஒரு சிலர்தான் மனதில் பதிந்து விடுகிறார்கள்.

பிரபலமான அபிஷேக்
ஒரு சில சீசன்களில் கலந்துகொண்ட வெற்றிபெற்ற போட்டியாளர்களில் பெயரை விடவும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களின் பெயரை சொன்னாலே நினைவிற்கு வந்து விடும். அந்த மாதிரிதான் தற்போது ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவது வாரத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார். இந்த சீசனுக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் இவர் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்தாலும் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார்.

ரசிகர்களின் விருப்பம்
அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிறகும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நிகழ்ச்சியில் இருக்கும் போது நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகரித்து வந்தது போலவே தற்போது இவர் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி உப்பு சப்பு இல்லாமல் தான் இருக்கிறது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவர் ரீஎன்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூட பலர் தங்களுடைய விருப்பத்தை தேடி வருகின்றனர்.

மலைப்பிரதேசங்களில் மகிழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அபிஷேக் ராஜா தற்போது ஹிமாலயா மலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார். அதுவும் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் ரசிகர்கள் பலர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கரைப்பதற்காக இவர் இந்த மலைப் பிரதேசங்களுக்கு சென்றிருக்கிறார் என்று கூறிவருகின்றனர். இயற்கையை ரசித்தபடி மனதை இலகுவாக்க இவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications