எனக்கு சரி தவறு என்று எதுவுமே கிடையாது..அபிஷேக் பேசியதைக் கேட்டு காண்டான சிபி
சென்னை: எப்பவாது இப்படி பண்ணலாம் ஆனா எப்பவுமே இப்படி பண்ணலாமா என்று அபிஷேக்கை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பஞ்சாயத்தை கூட்டுவதில் முதல் ஆளாக ஆஜராகிவிடுகிறார் அபிஷேக்.
இந்த சீசனில் அபிஷேக் மட்டும் தான் பிரச்சனை பண்ணி கொண்டிருக்கிறாரா இல்லை அவரை சுற்றி மட்டும்தான் கேமரா சுழல்கிறதா என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

சூடு பிடித்த டாஸ்க்
இந்த வார எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள் இன்றைய டாஸ்க்கில் ஜெயித்துவிட்டால் அவர்கள் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிவிடலாம் என்று சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். இன்றைய முதல் ப்ரோமோவில் காயின் வைத்து அதை ஆட்டையை போட்டவங்களுக்கு இந்த எலிமினேஷனிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று சொன்னதும் போட்டியாளர்கள் தீயாக வேலையில் இறங்கி விட்டனர்.

நெட்டிசன்களின் ஃபேவரைட் அபிஷேக்
ஆனால் இந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் இது ஒரு ரியாலிட்டி ஷோவா அல்லது குடும்ப படமா என்று யோசிக்கும் விதமாகத்தான் ஒவ்வொரு சீனிலும் இருந்து வருகிறது. ஒரு புறம் அடித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அடுத்த நொடியே அரவணைத்துக் கொள்கிறார்கள். இதில் எல்லாவற்றிலும் முதன்மையாக இருப்பவர் அபிஷேக் தான். ஆனால் அவருக்கு அதிகமாக நெகட்டிவர்ஸ் இருந்து வருகின்றனர். அவர்கள் அபிஷேக் செய்யும் அனைத்து விஷயங்களையும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

பறக்கும் மீம்ஸ்கள்
ஏற்கனவே நேற்றைய ப்ரோமோவில் சண்டைபோட்டு பெரிய அளவில் பாப்புலரான அபிஷேக்கை பார்த்ததும் நெட்டிசன்கள் தங்கள் மனதிற்கு ஏற்றது போல அவரை வைத்து ட்ரோல்ஸ்களில் கொளுத்திவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் அதே பாணியை அவர் செய்து கொண்டிருக்கிறார். அவர் வழக்கம் போல இன்றும் தன்னுடைய பேச்சை தான் அனைவரும் கவனிக்க வேண்டுமென்று கத்திப் பேசி கொண்டிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் எப்பவாவது இப்படி பண்ணினா பரவாயில்லை ஆனால் எப்பவுமே இப்படி படிக்கட்டில் இருந்தா வெறுப்பாக இருக்கிறது என்று இவருக்கு எதிராக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

என்ன வார்த்தை சொல்லிட்டீங்க
இந்த வார தலைவராக சிபி பதவி ஏற்றிருக்கும் நேரத்தில் இன்றைய டாஸ்க் பற்றி தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பிக்பாஸ் சொன்ன வழிமுறைகளின்படி தான் நான் நடப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போது எனக்கு சரி தப்பு என்று எதுவும் இல்லை என அடாவடியாக அபிஷேக் பேசிக் கொண்டிருக்கிறார். இவர் பேசுவதை கேட்டு சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் காண்டாகி இருக்கின்றனர். எத்தனை முறை சொன்னாலும் இவர் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் என்று பலர் கொதித்தெழுந்து வருகின்றனர். இவர் நிஜத்திலே இப்படி தானா அல்லது கண்டெண்ட்க்காக இப்படி செய்கிறாரா என்று பலர் புலம்பி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications