Karthik: என் தம்பி விஜய் அரசியலில் நல்லா வரட்டும்! அண்ணனாக இதை மட்டும் சொல்லுறேன்! நடிகர் கார்த்திக் ஆதரவு
சென்னை: நடிகர் விஜய் உடைய அரசியல் பயணத்திற்கு சினிமாவில் இருந்து ஒரு சிலர் மட்டும்தான் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் கார்த்திக் விஜய் உடைய அரசியல் வருகைக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவை விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை கடந்த வருடத்தில் தொடங்கியிருந்தார். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து கட்சிக் கூட்டங்கள் நடத்தி வருகிறார் அதிலும் சமீபத்தில் கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த அசம்பாவிதத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து இருக்க முடியாது.

கரூர் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு காரணம் விஜய் தரப்பின் அலட்சியம் என்று சிலர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். விஜய் தரப்பினர் தமிழக அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அதுபோல அதிமுக கட்சியில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்ததும் இந்த கட்சி மீது எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு அவருக்கு ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டும்தான் நேரடியாக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் அதைப் பற்றி பேசாமலேயே சமாளித்து கொண்டிருக்கிறார்கள். நாம ஏதாவது சொல்லப்போக அது வேறு விதமாக நமக்கே திரும்பிட கூடாதுன்னு சிலர் கவனமாக இருக்கிறார்கள். விஜய்க்கு தாங்கள் ஆதரவு கொடுப்பதாக சிலர் சொன்னாலும் அவருடைய அரசியல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் விஜய்யுடைய அரசியல் வருகை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு கார்த்திக் சந்தோஷமாக பேசியிருக்கிறார். "தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும். நல்லா வரட்டும்... அவர் சரியான நேரத்தில் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இப்போ சினிமாவில் உச்சத்தில் தான் இருக்கிறார். இந்த நேரத்திலேயே அரசியலிலும் வருகிறார். நல்லது செய்யட்டும். ஆனா, தம்பிக்கு ஒரு அண்ணனாக நான் சொல்ற விஷயம் என்னன்னா அவர் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கணும். அரசியலுக்காக சினிமாவை அவர் விட்டுடக்கூடாது" என்று உரிமையோடு பேசி இருக்கிறார்.
இதை கார்த்திக் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். அதிலும் சில நாட்களாகவே கார்த்திக் பற்றி youtubeல் பலர் பேசி வருவதை பார்த்திருப்போம். அதிலும் இயக்குனர் பாரதி கண்ணன் தான் உதவி இயக்குனராக இருக்கும்போது கார்த்க்கிடம் ஒரு படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு திருப்பி அந்த பணத்தை கேட்டபோது அவர் பேசிய விஷயத்தை பற்றி சிரித்தப்படியே பேசி இருந்தார்.
அதிலும் கார்த்திக் வாய்ஸ்லயே பாரதி கண்ணன் பேச அந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிவிட்டது. அதைப் பார்த்த சிலர் youtube இல் கார்த்திக்கை பற்றி பேச தொடங்கிவிட்டனர். கார்த்திக் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் பலர் இவரை பற்றி பேசுவதன் மூலமாக இவர் மீண்டும் டைம்லைனுக்கு வந்துவிட்டார். இந்த நேரத்தில் விஜயை பற்றி பாராட்டியதை பார்த்ததும் 2கே கிட்ஸ்கள் கூட கார்த்திக்கு ரசிகர்களாக மாறி இருக்கிறார்களாம்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்












Click it and Unblock the Notifications