நான் தனுஷ் பற்றி அப்படி சொல்லவே இல்லைங்க! நடிகை மான்யா வெளியிட்ட திடீர் வீடியோ! பின்னணி காரணம் இதுதானா?
சென்னை: சீரியல் நடிகை மான்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது நடிகர் தனுஷ் உதவியாளர் என்று ஒரு நபர் தனக்கு போன் செய்து அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியதாக பேசியிருந்தார். இந்த செய்தி தான் நேற்றிலிருந்து வைரல் ஆகி வந்தது. தனுஷ் உடைய ரசிகர்கள் அந்த நடிகையை திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் அந்த நடிகை தான் என்ன சொன்னேன் என்பது பற்றி இப்போது விளக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை மான்யா ஆனந்த் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் தான். சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு இப்போது தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சினிமாவில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அவர் பேசியது ஒரு அர்த்தத்தில் ஆனால் அது இணையத்தில் இன்னொரு விதமாக வைரலானது. இதனால் பதறிப்போன மான்யா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விளக்கம் கொடுத்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

அதில், நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றசாட்டு வைக்கவில்லை அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது என்றுதான் நான் சொன்னேன். அதோடு அதை தனுஷ் உடைய டீம் கவனிக்க வேண்டும் என்றும் பேசி இருந்தேன். ஆனால் இது தவறாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது என்று சொல்லி இருந்தார்.
அதற்குப் பிறகு இன்றும் அதே செய்தி வைரலாகி வருவதை தொடர்ந்து இப்போது மான்யா instagram பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசும்போது நேற்றில் இருந்து நான் தனுஷ் மீது அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் அப்படி பேசவே இல்லை தனுஷின் மேலாளர் என்று எனக்கு ஒருவர் போன் செய்தார் அவர் உண்மையிலேயே யார் என்று எனக்குத் தெரியாது இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன் ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் என் இப்போது இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
நான் மீண்டும் சொல்கிறேன். நான் தனுஷ் மீது குற்றச்சாட்டும் வைக்கவில்லை. என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்புபவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சில youtube சேனல்களில் தனுஷ் எனக்கு தொந்தரவு கொடுத்தார் என்று நான் சொன்னதாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது, ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு இடத்திற்கு வந்து பிறகு அதை உடைப்பது போல நான் யார் மீதும் குற்றச்சாட்டு வைக்கவில்லை. யாருடைய பெயரையும் கலங்கப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் கிடையாது என்று அந்த வீடியோவில் மான்யா பேசியிருக்கிறார்.
மான்யா இப்படி பேசியதற்கு காரணம் சோசியல் மீடியாவில் தனுஷை பலர் ட்ரோல் செய்து கொண்டிருந்தது தான். தனுஷ் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் வழங்குகிறது அந்த வரிசையில் இப்போது இதையும் சொல்லி பலர் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வெளியிட்டு வந்தனர். அதேபோல மான்யாவை தனுஷ் உடைய ரசிகர்களும் திட்டி தீர்த்து வந்தனர். இதனால் அவர் இப்போது தெளிவான வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இனியாவது இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications