திமிராய் இருப்பதில் தப்பில்லையே..!!நிரோஷா வெளியிட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: நடிகையை நிரோஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதாம்.
நடிகர் ராம்கியின் மனைவியான நிரோஷா வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். தற்போது சின்னத்திரை தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகையாக இருக்கும் நிரோஷா பல சோதனைகளை தாண்டி வந்துள்ளாராம். அதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், "தனித்து போராடி கரை சேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே..!!"என்று கேப்ஷனோடு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

மூன்று வயதில் தொடங்கிய பயணம்
வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து பலருடைய மனதில் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டவர் தான் நிரோஷா. இவர் திரை குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நடிக்க கூடாது என்று வீட்டில் பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதாம். நிரோஷாவின் தந்தையான எம் ஆர் ராதா மற்றும் ராதிகா இருவருமே நடிப்பில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருந்தாலும், நிரோஷா அவர்களுக்கு எல்லாம் விதிவிலக்காக அமையாமல் நானும் இவர்களை விட சலித்தவர் அல்ல என்று தன்னுடைய நடிப்பு திறமையை மூன்று வயதிலேயே காட்டி இருக்கிறார். நிரோஷாவின் அப்பா எம் ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம் ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் .

திரைப்படங்களில் அறிமுகம்
நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாராக இருந்த நிரோஷா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். நடிக்க தொடங்குவதற்கு முன்பு நிரோஷாவின் வீட்டில் அவர்களுடைய அண்ணன்கள் இவருக்கு நடிப்பதற்கு அனுமதி கொடுக்காமல் தான் இருந்திருக்கிறார்களாம். ஆனால், இயக்குனர் மணிரத்தினம் தான் முதன் முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கையை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். நிரோஷாவிற்கு நடிப்பதற்கு ஆசை இருப்பதால் அவர் நடிக்கட்டும் என்று அவருக்கு பச்சைக்கொடி காட்டியது ராதிகாதானாம். முதல் திரைப்படம் ஆன அக்னி நட்சத்திரம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு வெற்றியை கொடுத்து இருந்ததாம்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் அதிக அளவில் முத்த காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும் இந்த காட்சிகளில் எப்படி புதியதாக நடிக்க வந்த நிரோஷா சரி என்று சொல்லிவிட்டார் என்று பலர் கேள்விகளை எழுப்பி இருந்தார்களாம். அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக ராதிகாவின் சகோதரி இப்படி நடிக்க ஓகே சொல்லி விட்டார்களா?? என்று ராதிகாவின் பெயரும்
அந்த நேரத்தில் அடிபட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் அதற்குப் பிறகு செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் குடும்ப பாங்காக இவர் நடித்தது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டதாம்.

காதல் திருமணம்
செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ராம்கி உடன் நிரோஷாவிற்கு காதல் ஏற்பட்டதாம். ஆனால் அப்போது கூட அவர் அதை வெளியில் சொல்லவில்லையாம். ஆனால் அதற்குப் பிறகு நிரோஷாவிற்கு நடைபெற்ற ஒரு ட்ரெயின் விபத்தில் ராம்கி தான் அவரை காப்பாற்றினாராம். அதுமட்டுமல்லாமல் அதற்கு பிறகும் ஒரு திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தில் நிரோஷாவை மாடு முட்டுகிற மாதிரி ஒரு சீன் இருந்ததாம். அதில் உண்மையாகவே நிரோஷாவை மாடு முட்ட வந்ததாம் அப்போது கூட ராம்கி தான் அவரை காப்பாற்றினாராம். அதனால் அவர் மீது நிரோஷா காதல் கொண்டு அவர்கள் ரகசிய திருமணம் செய்து வீட்டிற்கு தெரியாமல் மூன்று வருடங்கள் மறைத்து வந்தார்களாம்.

கெத்தான பதிவு
வீட்டில் காதல் திருமணத்திற்கு சம்பாதிக்காததால் எவ்வளவோ அடி வாங்கி ராம்கிவை திருமணம் செய்து கொண்ட நிரோஷா திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சீரியல் தயாரிப்பாளராகவும் அவர் புதுமுகம் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் நிரோஷா, "தனித்து போராடி கரை சேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே! "என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இது நிரோஷாவின் குடும்பத்தினருக்காக பதிவா?? என்று கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் எவ்வளவோ போராட்டத்தை சிறுவயதிலிருந்தே நிரோஷா தாண்டி வந்ததால் இந்த பதிவு சரிதான் என்று அவருக்காக லைக்குகளையும், ஹார்ட்டின்களையும் பறக்க விட்டு வருகிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications