இது கர்மா தான்.. அன்னைக்கு அப்படி பேசினீங்க.. இப்போ என்ன நடக்குது..!! வனிதாவின் அதிரடி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் திரைப்பட நடிகையாக பலருக்கும் பரிட்சயம் ஆனவர். ஒரு சில நேரங்களில் நடிப்பை தாண்டியும் சர்ச்சைகளில் சிக்கி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வனிதாவின் குடும்ப பிரச்சனை முதல் கல்யாண வாழ்க்கை வரை அனைத்துமே திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது. அதனால் தான் அவர் எப்போதும் யாருக்கும் பயப்படுவது இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
நடிகை வனிதா விஜயகுமார் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ராஜ்கிரண், விஜய் போன்ற நடிகர்களுடன் அவர் நடித்திருந்தாலும் அப்போது கூட இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக அளவில் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும்போது இவருடைய குடும்ப பிரச்சனை காரணமாக இவரை போலீஸ் அரெஸ்ட் செய்ய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குடும்ப பிரச்சனை
வனிதாவின் குடும்ப பிரச்சனையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரும் பேசும் பொருளாக மாறிக்கொண்டிருந்தது. போலீஸ் ஸ்டேஷன் செல்வதும் பிரஸ்மீட் வைப்பதும் என்று வனிதாவின் வாழ்க்கையில் பரபரப்பு குறைந்ததே இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமான பிறகு வனிதாவை ரசிகர்கள் வேறு விதமாக பார்க்கத் தொடங்கி விட்டார்கள். வனிதாவிற்குள் இவ்வளவு ஒரு கலகலப்பான கேரக்டர் இருக்கிறதா என்பதை இந்த நிகழ்ச்சி தான் பலருக்கும் காட்டியிருந்தது. தன்னுடைய சமையல் திறமையினால் பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார்.

கருத்து மோதல்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டிருந்தது சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வைத்திருந்தனர்.இரண்டு பெண், குழந்தைகள் இருக்கும் போது இவருக்கு இப்படி ஒரு திருமணம் தேவையா?? என்று பலர் கூறி வந்தாலும் வனிதாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் அவரைப் பற்றி அதிகமாக கலாய்த்தவர்களில் ஒருவர் தயாரிப்பாளர் ரவீந்தர். வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவரைப் பற்றி தன்னுடைய ரிவ்யூ மூலமாக பல்வேறு தகவல்களை கூறியிருந்தார். இந்த நிலையில் வனிதாவின் திருமண வாழ்க்கையில் கொந்தளித்த ரவீந்தர், பீட்டர் பால் மனைவி எலிசபெத் என்பவருக்கு துணையாக வனிதாவுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தார்.

வனிதாவின் பதில்
தற்போது ரவீந்தர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமியை இவர் எளிமையான முறையில் திருமணம் செய்ததும் இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்மா குறித்து பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இது ரவீந்தருக்கான பதிவு என்று கூறி இருந்தனர்.

எளிமையான பதிலடி
அதை குறித்து தற்போது வனிதா ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதில், "நான்..இது ஜெனரலா பதிவிட்டேன். ஆனால் இல்லை என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை. அவர்கள் இப்போதுதான் திருமணம் செய்து இருக்கிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நானே வாழ்த்துகிறேன். ஆனால் என்னைக்குமே நம்ம ஒரு விஷயம் பண்ணும் போது எப்படி இன்னொருத்தர அஃபெக்ட் பண்ணும் என்று யோசிக்க மாட்டோம். தேவையில்லாம போயி இன்னொருத்தர் லைஃப்ல நுழையவும் கூடாது, பேசவும் கூடாது. அவங்கவங்க லைஃப் அவங்களுக்கு தான் தெரியும். அவங்க டீல் பண்ணிக்குவாங்க, நம்ம என்ன எதிர்க்கட்சி லாயரா..?? நமக்கு சம்பளம் கொடுத்து பேசுறதுக்கு. பப்ளிசிட்டி எனும் ஒரு விஷயம் வந்து மிஸ் யூஸ் பண்றது இப்போ நிறைய நடக்குது.."என்று வனிதா கூறி இருக்கிறார். இந்த கருத்தை கேட்ட ரசிகர்கள் இது ரவீந்தருக்கு கொடுக்கும் பதிலடியா என்று கமெண்ட்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications