அகோரியின்... ஆட்டம்...!! ஹாட்ஸ்டாரையே... ஹாட்டாக்க வரும் பாலையா..!!!
சென்னை: தெலுங்கு திரையுலகின் ஆக்ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா சாதனைகளை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படம் ஓடிடி ப்ளாட்பாரத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
தெலுங்கு திரையுலகின் விஜயகாந்த் என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூல் சாதனை படைத்த "அகண்டா"திரைப்படத்தின் ஒடிடி உரிமையை கைப்பற்றியுள்ள 'டிஸ்னி- ஹாட்ஸ்டார்' நிறுவனம் அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

ஆக்ஷன் ஹீரோ
நீங்கள்.. எல்லாம்.. என்னப்பா.. சண்டை..போடுறீங்க..!? என்று ஜாக்கிஜான், புரூஸ்லி மட்டுமின்றி ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இருக்கிறார் என்றால்..!! அவர் தெலுங்கு திரையுலகில் பாலையா என்று அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணாவாக தான் இருக்க முடியும. சண்டைக்காட்சிகளில் இவரது உடம்பில் கை, கால்கள் மட்டுமின்றி இவரது பார்வையும் உடையும் கூட சண்டைக் காட்சிகளில் சிறப்பாக பெர்பாமன்ஸ் செய்யும். அந்த அளவிற்கு சண்டைக்காட்சிகளில் தனக்கென்று யாராலும் பின்பற்ற முடியாத அளவிற்கு ஒரு தனி ஸ்டைலை வைத்திருப்பவர்.

தெலுங்கு திரை உலகில் வசூல் சாதனை
நந்தமுரி பாலையா இரு வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளிவந்து தெலுங்கு திரையுலகை ஒரு மிரட்டு மிரட்டிய அகண்டா திரைப்படம் கொஞ்ச நாட்களிலேயே தெலுங்கு திரை உலகில் 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியது. சாதாரணமாக நகரத்தில் வாழும் மனிதனாகவும், கடுமையான சிவ பக்தன் 'அகோரி' ஆகவும் இரண்டு வேடங்களில் பட்டையைக் கிளப்பி இருந்தார். பாலகிருஷ்ணா தெலுங்குத் திரையுலகில் எந்த ஹுரோவும் இதுவரை நடித்திராத அகோரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக பலர் பாராட்டு தெரிவித்து இருந்தனர். பொதுவாக ஆன்மீகவாதியாகவும், ஆன்மீகவாதிகளுக்கு ஆதரவான நபராகவும் பல படங்களில் தன்னை காட்டிக் கொண்ட பாலகிருஷ்ணன் இந்தப்படத்தில் அகோரி வேடத்தில் சிவனாகவே வாழ்ந்திருப்பதாக பலர் திரை விமர்சனங்களில் கருத்து கூறினர்.

ரசிகர்கள் கோரிக்கை
நந்தமூரி பாலகிருஷ்ணா உடன் இணைந்து பிரக்யா ஜெய்ஸ்வால், ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு, அவினாஷ் என்று பல பிரபலங்கள் நடித்துள்ள அகண்டா திரைப்படத்தின் இணையதள உரிமையைப் பெற்றுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது ஓடிடி பிளாட்பார்மில் ஜனவரி 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை பார்த்த வேறு மொழியைச் சேர்ந்த பாலகிருஷ்ணா ரசிகர்கள் தங்களது மொழிகளிலும் அகன்டா படத்தை டப் செய்து வெளியிடுமாறு ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications