தான் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதை வெட்கத்தோடு கூறிய ஆலியா...இப்போ எத்தனை மாதம் தெரியுமா
சென்னை: ஆலியா மானசா தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கன்ஃபார்ம் செய்துள்ளார்.
இவர் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது வெட்கத்தோடு விடை கொடுத்திருக்கிறார்.
ஆலியா மானசா கூறிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மகிழ்ச்சியான செய்தி கூறிய ஆலியா
சின்னத்திரை பிரபலங்களான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி தற்போது தாங்களுடைய மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு கூறியிருக்கின்றனர். அவர்களின் ரசிகர்களும் தற்போது இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறனர் முகத்தில் மகிழ்ச்சி பொங்க நாணத்தோடு ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் கூறிய இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருந்து வருகிறது.

நிஜ காதல் தம்பதியினர்
விஜய் டிவி நடிகர்களில் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி தற்போது இருவருமே சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் ஆலியாவும், சன் டிவியில் கயல் சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே சீரியலில் அறிமுகமாகி ரீல் காதலர்களாக நடித்து நிஜக் காதலர்களாக வாழ்க்கையில் கரம் பிடித்தவர்கள். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், காதல் ,அன்பால் மனது ஒன்றிணைந்து தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இரண்டாவது முறை கர்ப்பம்
தற்போதைய சூழ்நிலையில் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் தங்கள் நடிப்புக்காகவும், வேலைக்காகவும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், இவர்கள் திருமணம் முடிந்த உடனேயே முதல் குழந்தைக்கு பெற்றோர்களாக மாறிவிட்டனர். குழந்தை பிறந்தாலும் எங்களுடைய வேலையில் கவனம் குறையாது என்பதை நிரூபித்து இருவரும் வெவ்வேறு சீரியல்களில் பிசியாக கலக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
முதல் குழந்தைக்கு இரண்டு வயது ஆகாத நிலையில் இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி சீரியலில் மீண்டும் ஆலியா நடிப்பாரா?? என்று பலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீரியல்களில் இவருடைய வயிறு கொஞ்சம் தெரிய ஆரம்பித்ததால், ஆலியாவிற்கு எத்தனை மாதம் என்று அவருடைய ரசிகர்கள் ஆர்வத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போது தங்களுடைய ரசிகர்களுக்கு பதில் சொல்லும் பொருட்டு இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் வெட்கத்தோடு தான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருப்பதை ஆலியா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர்களுக்கு அய்லா பாப்பா இருக்கும் நிலையில், அய்லா பாப்பா அக்கா ஆகப் போகிறார் என்று சஞ்சீவ் லைவில் தெரிவித்திருந்தார். தற்போது வெளிப்படையாக தங்களுடைய மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications