தனது லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்த ஆலியா.. இந்த முறை இப்படி ஒரு சம்பிரதாயமா! அழகான தருணம்
சென்னை: தன்னுடைய அழகான நடிப்பால் சின்னத்திரையில் பெருமளவு ரசிகர்களை வைத்திருக்கும் ஆலியா, தற்பொழுது சின்னத்திரையில் தன்னுடைய மூன்றாவது இன்னிங்ஸில் இன்று முதல் களமிறங்க துவங்கியுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் ஆசீயுடன் முதல் நாள் படப்பிடிப்பிற்கு செல்வதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோவிற்கு ஆலியாவின் ரசிகர்கள் வாழ்த்துகளை சொல்லுவதோடு மட்டுமின்றி, தங்களது அபிமான நட்சத்திரத்தை மிக விரைவில் சின்னத்திரையில் மீண்டும் காண இருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்தும் வருகின்றனர்.

வெற்றிகரமான இரண்டாவது இன்னிங்ஸ்
சின்னத்திரையில் பல வருடங்களாக நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஆலியா.ராஜா ராணி சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு முதல் குழந்தை பிறந்த பொழுது சின்னத்திரைக்கு சிறிது பிரேக் விட்ட ஆலியா, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே பொலிவுடன் சின்னத்திரையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை களமிறங்கினார். தன்னுடைய ரீ என்ட்ரியிலும் வெற்றிகரமான நட்சத்திரமாக சின்னத்திரை வட்டாரத்தில் கலக்கி வந்தார்.

முயற்சியால் கிடைத்த மூன்றாவது என்ட்ரி
தன்னுடைய இரண்டாவது குழந்தைக்காக சமீபத்தில் மீண்டும் நடிப்பதிலிருந்து ஓய்வு கொடுத்த ஆலியா, தற்பொழுது சின்னத்திரையில் மீண்டும் தனது மூன்றாவது இன்னிங்ஸை ஆடுவதற்கு தயாராகி விட்டார். சஞ்சீவ்-ஆலியா ஜோடி தாங்கள் காதலிக்கும் போது இருந்தே தங்களுடைய கொண்டாட்டங்களையும், நிகழ்வுகளையும் சமூக வலைதளங்களில் சுடச்சுட அப்டேட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் சமீபகாலமாக இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு மீண்டும் தான் சின்னத்திரையில் நடிக்க தயாராவதை வீடியோவாக சமூக வலைதள பக்கங்களில் போஸ்ட் செய்து வந்தார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆலியாவை மீண்டும் சின்னத்திரையில் காண ஆர்வமாகினர்.

ரூட்டை மாற்றிய ஆலியா
தன்னுடைய கேரியரில் ஆரம்பத்திலிருந்து விஜய் டிவியின் செட் பிராப்பர்டி போல் இருந்த ஆலியா, தற்பொழுது சீரியலில் தன்னுடைய மறு பிரவேசத்தை சன் டிவி நிறுவனத்தின் சிரியல் மூலம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.ஆலியா இரண்டு குழந்தைகளை பெற்றதால் அவரது தோற்றம் முன்பு போல் இல்லை என்றும்,இதனால் முன்பு இருந்தது போல் அவருக்கு சீரியலில் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது என்று நினைத்து விஜய் டிவி நிறுவனம் அவருக்கு வாய்ப்பை மறுத்ததாகவும், அதனால் தான் சன் டிவி மூலம் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

கணவர் சென்டிமென்ட்
சின்னத்திரையின் பெஸ்ட் ஜோடி என்று சொல்லப்படும் அளவிற்கு திருமணத்திற்கு முன்பு இருந்த காதல் கொஞ்சமும் குறையாமல் இன்று வரை அதே காதலோடு வலம் வந்து கொண்டிருக்கும் ஜோடி சஞ்சீவ்-ஆலியா. தன்னுடைய அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாக தன்னுடைய கணவர் சஞ்சீவ் இருப்பதாக அடிக்கடி பெருமையுடன் கூறும் ஆலியா இன்று முதல் நாள் சூட்டிங்கிற்கு செல்லும் பொழுது தன் கணவரை பார்த்து 'தான் முதல் நாள் சூட்டிங்குக்கு செல்வதாகவும், அதனால் உங்களை பார்த்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு செல்வதாக உணர்ச்சி பொங்க கூறி உள்ள வீடியோ பார்ப்பதற்கு க்யூட்டாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications