லைவில் விக்ரமன் முன்னிலையில் அனிதா சம்பத் கேட்ட கேள்வி.. இத்தனை வருட ஏக்கத்தை கொட்டி விட்டாரே!
அனிதா சம்பத் லைவில் விக்ரமன் ஜெயிக்காததற்கு வாழ்த்து கூறி தன்னுடைய கேள்விகளை ரசிகர்களின் முன் விக்ரமனிடம் கேட்டிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் ரசிகர்களோடு கலந்துரையாடி இருக்கிறார்.
ரசிகர்களின் முன்னிலையில் விக்ரமன் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் அனிதா சம்பத் போன் செய்து பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்காததை குறித்து அதற்கு வாழ்த்து கூறி நீங்கள் ஜெயிக்காததால் தான் பல உண்மைகள் வெளியே பேசப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களோடு கலந்துரையாடல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆகின்ற நிலையில் இந்த சீசனில் அதிகமாக ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் விக்ரமன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் டைட்டில் ஜெயித்து விட்டார் இதனால் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விக்ரமன் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அடிக்கடி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெரிய அளவில் ரசிகர்களை அதிகமாக ஒரே இடத்தில் பார்க்க வைத்து கலந்துரையாடி இருக்கிறார்.

அனிதா சம்பத் போன் கால்
விக்ரமனுக்கு ஆதரவாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் ஆரம்பத்தில் இருந்து ஆதரவு கூறி வந்தனர். அந்த வகையில் விக்ரமனுக்கு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு செய்தி வாசிப்பாளராகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் நடிகையாகவும் இருக்கும் அனிதா சம்பத் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். முதல் முறையாக ரசிகர்களோடு விக்ரமன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது விக்ரமனுக்கு அனிதா சம்பத் போன் செய்து இருக்கிறார் .அப்போது விக்ரமன் நீங்கள் டைட்டில் ஜெயிக்காததற்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இது விக்ரமனை மட்டும் இல்லாமல் அவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விக்குவிற்கு அர்த்தம்
அது மட்டுமில்லாமல் உங்களை கேர்ள்ஸ் எல்லாம் விக்கு விக்கு என்று கூப்பிடுகிறார்களே என்று கேட்க அங்கிருந்த பெண் அனைவரும் சத்தமிடுகின்றனர். இது என்ன மாமா குட்டி மாதிரியா என்று அனிதா சம்பத் கேட்க, விக்கு என்கிற பெயர் வீட்டில் உள்ள ராம் தான் வச்சாரு, பின்பு மைனா அப்படியே கூப்பிட தொடங்குனாங்க, இப்போ வெளியே எல்லாரும் அப்படி கூப்பிடறாங்க என்று கூறுகிறார். பின்பு நன்றி நீங்க ஜெயிக்காததற்கு என்று கூறியதற்கு அனிதா சம்பத் விளக்கம் கொடுக்கிறார். நீங்கள் இந்த டைட்டில் வாங்காததால் தான் நிறைய விஷயங்கள் பேசப்படுகிறது. முக்கியமா பெண் போட்டியாளர்கள் பிக் பாஸுக்குள் இதற்கு முன்பு எந்த அளவிற்கு பேசப்பட்டு இருக்கிறார்கள் என்கிற மிகப்பெரிய விவாதம் நீங்கள் ட்ராஃபி வாங்காததால் தான் பேசப்படுகிறது.

இது என்ன நியாயம்
பிஆர் என்பது எந்த அளவிற்கு ஓட் பண்ணுகிறது. மக்களுடைய மைண்ட் செட் எந்த மாதிரி இருக்கிறது என்பது நீங்கள் டைட்டில் வாங்காததால் வெளியே வந்திருக்கிறது .இதற்காக அனிதா சம்பத் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். பெண்களுக்கு பிக் பாஸ்க்கு வெளியே மோசமான நிலைமை இருக்கிறது. பொதுவா எல்லாருக்கும் கோபம் என்பது நார்மலானது தான். கோவப்படுறதாக இருக்கட்டும் நம்மளுடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறதா இருக்கட்டும். எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் அதையே ஒரு பொண்ணு
பண்ணும் போது உள்ள வச்சு நம்மளுக்கு எதுவும் தெரியாது, ஆனால் வெளியே வந்து பார்த்தா பஜாரின்னு பெயர் வைப்பாங்க, கல்யாணம் ஆகாத பொண்ணா இருந்தா இதெல்லாம் யாரு கல்யாணம் பண்ண போறான்னு சொல்லுவாங்க, இல்ல கல்யாணம் ஆன பொண்ணுன்னா இவ கூட எல்லாம் எப்படி புருஷன் வாழ்றான்னு கேப்பாங்க? இவ்வளவு விஷயங்கள் நாங்க பேஸ் பண்றோம். ஆனால் அதுவே ஒரு பையன் கோபப்பட்டா கெத்து, ஹீரோ, ரகடு பாய் என்று அவரை அங்கீகரிக்காங்க என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

விக்ரமனின் பதில்
அதைத் தொடர்ந்து விக்ரமன் ஆமாம் இது உண்மைதான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து ஒரு இடத்தில் கூறுவார், பொண்ணா இருந்து உனக்கு பாத்திரம் கழுவ தெரியாதா? என்று கேட்பார். அது பொண்ணா இருந்தா மட்டும்தான் பாத்திரம் கழுவனுமானு நான் அந்த இடத்தில் கேட்டேன்
என்று பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த நிகழ்வு பற்றி அந்த இடத்தில் பேச, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். பின்பு இந்த மாதிரி பேசுறவங்க அதிகமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் அப்படி பேசினால் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று விக்ரமன் கூறியிருக்கிறார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications