நீதான் என் முதுகில் குத்தி விட்டாய்..இசைவாணி மீது குற்றசாட்டு வைக்கும் இமான் அண்ணாச்சி
சென்னை: ப்ரமோவில் அடிச்சிக்கிறதும், எபிசோடில் கூடிக்கிறதும் பிக்பாஸில் வழக்கமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் அண்ணாச்சியும் இசைவாணியும் பயங்கரமாக சண்டை போட்டு வருகின்றனர்.
இசைவாணி என் முதுகில் குத்து விட்டார் என்று இமான் அண்ணாச்சி பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

இது வழக்கமானதுதான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சண்டை சச்சரவுகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் தான் சென்றுக்கொண்டு இருக்கும். ஆனால் இந்த ஐந்தாவது சீசன் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்களும் அடிக்கடி சண்டை போட்டு ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்களின் குற்றசட்டு
சில நேரங்களில் ஜாலியாக இந்த எபிசோடு இருந்தாலும் பல நேரங்களில் யாருக்கு எங்கு இருந்து சண்டை வருகிறது என்றே கணிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். முதல் வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக கூடி கும்மாளமிட்டு கொண்டிருந்தவர்கள். தற்போது எந்த பக்கம் திரும்பினாலும் சண்டைதான் என்று சொல்லும் வகையில் தான் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ப்ரமோ வில் ஒவ்வொரு சீசனிலும் காரசாரமான சண்டை காட்சிகளை காட்டிவிட்டு அதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு எபிசோடு பார்த்தால் அங்கே ஒன்றும் இல்லாமல் புஸ்சென்று போய்விடுகிறது என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முட்டிக் கொள்ளும் சண்டை
இந்த ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே இசைவாணி மற்றும் அண்ணாச்சி இடையில் அடிக்கடி வாய்க்கால் வரப்புச் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னைவிட வயதில் இளையவராக இருந்தாலும் இசைவாணி செய்யும் செயல்கள் அண்ணாச்சிக்கு பிடிக்கவில்லை என்பது அவருடைய முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். என்ன தான் இசையை பிடிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அவரை சண்டைக்கு இழுப்பது அண்ணாச்சி தான் என்றும் கூறிவருகின்றனர்.

அண்ணாச்சியின் குற்றசட்டு
ஒரு சில நேரங்களில் அண்ணாச்சிக்கு நானும் சளைத்தவரல்ல என்று இசைவாணியும் அண்ணாச்சியிடம் வம்பிழுத்து வருகிறார். கமல் முன்பு அனைத்து போட்டியாளர்களும் சகஜமாகவும் சிரித்த முகமாகவும் பேசிக் கொண்டிருந்தாலும் மற்ற நாட்களில் தங்களுடைய சுய ரூபத்தைக் காட்டி விடுகிறார்கள். இன்று முதல் ப்ரமோவில் கூட அண்ணாச்சிக்கும் இசைக்கும் இடையே சண்டை தொடங்கிவிட்டது. இவர்கள் சண்டையை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இசைவாணி என்னுடைய முதுகில் குத்திவிட்டார் என்று அண்ணாச்சி கூறி இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications