"மதம் மாற சொல்லி நான் கட்டாயப்படுத்தவில்லை” திவ்யாவுக்காக தான் நான் அப்படி.. அர்னாவ் விளக்கம்
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன திவ்யா தன்னை மதம் மாறச் சொல்லி திருமணம் செய்த செல்லமா சீரியல் நடிகர் அர்னாவ் தற்போது அடித்து துன்புறுத்துவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தன்னுடைய திருமணத்தில் என்ன நடந்தது என்பதை குறித்து தற்போது அர்னாவ் முதல்முறையாக பேசியிருக்கிறார்.

அர்னாவ் மனைவி குற்றச்சாட்டு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனை குறித்து அவருடைய மனைவி திவ்யா தற்போது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் அர்னாவ்வின் மனைவியான திவ்யா பேசிய வீடியோக்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மதம் மாறி திருமணம் செய்த தன்னை தவிக்க விட்டு விட்டு அர்னாவ் சீரியலில் நடிக்கும் வேறு ஒரு நடிகையுடன் பழகி வருவதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது திவ்யா கர்ப்பமாகவும் இருந்து வருகிறார். அதனால் தன்னுடைய கணவர் அடித்ததால் வயிறு வலியோடு நடிகை திவ்யா மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஆதாரம்
திவ்யாவின் குற்ற சாட்டுகளை மறுத்த அர்னாவ் தன்னுடைய மனைவி கூறுவது பொய் என்றும் அவரை அடித்தேன் என்று சொன்ன நேரத்தில் நான் அவரோடு இல்லவே இல்லை. அதற்கான ஆதாரத்தை நான் தருவதாகவும் கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே திவ்யாவுக்கு திருமணம் முடிந்திருந்தது. அதைப்பற்றி என்னிடம் கூறியிருந்தார். ஆனால் நாங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போதும் அவர் விவாகரத்து வாங்காமல் தான் இருந்து வந்துள்ளார். அதைப்பற்றி என்னிடம் கூறவே இல்லை. அவருக்கு குழந்தை இருப்பது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது என்றும் இவரும் பதில் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இதுதான் காரணமாம்
திவ்யா தான் ஆசைப்பட்டு முஸ்லிம் மதத்திற்கு மாறினார். நான் எந்த கட்டாயமும் படுத்தவில்லை ஆனால் நான் திவ்யாவிற்காக இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து இருக்கிறேன். நான் அவரை கட்டாயப்படுத்த வேண்டும் என்றால் அப்படி எல்லாம் கோவிலில் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே என்று கூறியிருக்கிறார். நாங்கள் ஐந்து வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கும் போதே திவ்யா தான் அடிக்கடி நான் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுகிறேன் என்று கூறிக் கொண்டிருப்பார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர்கள் இருவரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய வேண்டும் என்றால் யாராவது ஒருவர் மதம் மாற வேண்டும் என்று இருப்பதாகவும் அதனால் திவ்யா மதம் மாறியதாகவும் அர்னாவ் தெரிவித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பதிவால் வந்த வினை
அர்னாவ் வீட்டில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்க வில்லையாம். அதனால் ரகசியமாக திருமணத்தை முடித்துவிட்டு பின்பு
அர்னாவ் வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்தார்களாம். ஆனால் இவர்கள் ரகசியமாக திருமணம் முடிந்ததை சமூக வலைத்தளத்தில் திவ்யா பதிவிட்டதால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று அர்னாவ் கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தான் இந்து முறைப்படி கோவிலில் வைத்து திவ்யாவிற்கு தாலி கட்டியதை வேண்டும் என்று தான் திவ்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். என்னையும் என்னுடைய குடும்பத்தையும் கேவலப்படுத்த வேண்டும் என்று திவ்யா சிலருடைய வழிகாட்டுதலால் இப்படி செய்திருக்கிறார் என்று அர்னாவ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications