விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் பல சின்னத்திரை ரசிகர்களின் மனதில் புதிதாகவே இருக்கிறது. 5 வருடங்களுக்கு மேலாக ஓடி, இல்லத்தரசிகளின் வாழ்க்கையை பிரதிபலித்த இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகும், அதன் கதாபாத்திரங்கள் குறித்து பேசுவது இன்னும் குறையவில்லை.
இந்த சீரியலில் பாக்கியாவாக நடித்த சுசித்ரா மற்றும் கோபியாக நடித்த சதீஷ் ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷமாக மாறியுள்ளது.

பாக்கியா ஒரு கதாபாத்திரம் மட்டும் இல்லை
பாக்கியலட்சுமி சீரியல் சாதாரண குடும்ப கதையாக இல்லாமல், பல பெண்களின் வாழ்க்கையை பிரதிபலித்தது. குடும்பத்தில் மதிப்பு இல்லாமல் இருந்தாலும், தன்னம்பிக்கையால் முன்னேறும் ஒரு பெண்ணின் பயணமாக பாக்கியா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.
கணவன், மாமியார், குழந்தைகள் என அனைவராலும் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், தனது உழைப்பாலும் மன உறுதியாலும் தன்னை நிரூபித்துக் கொண்ட பெண் என்ற கோணத்தில் அந்த கதாபாத்திரம் அமைந்தது. இதனால் தான் அந்த சீரியல் பல இல்லத்தரசிகளுக்கு ஒரு "ரோல் மாடல்" ஆக மாறியது.
மீண்டும் சேரும் அதே ஜோடி
இப்போது அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது போல, சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் புதிய சீரியலில் ஜோடியாக இணைகிறார்கள். இந்த புதிய சீரியலுக்கு "ஆதலால் காதல் செய்வீர்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீரியலின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருப்பதாகவும், விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.
ஹீரோவாக அருண் பிரசாத் கம்பேக்
இந்த சீரியலில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஹீரோவாக நடிக்க இருப்பது அருண் பிரசாத். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர். அதற்குப் பிறகு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் கவனம் பெற்றார். சில காலமாக சீரியல்களில் இருந்து விலகி இருந்த இவர், இந்த புதிய சீரியல் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார்.
ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
ஒருபுறம் பாக்கியலட்சுமி ஜோடி மீண்டும் சேருவது... மறுபுறம் அருண் பிரசாத் கம் பேக் கொடுப்பது... இவை இரண்டும் சேர்ந்து இந்த புதிய சீரியலுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பாக்கியலட்சுமி முடிந்த பிறகு "அந்த மாதிரி ஒரு சீரியல் மீண்டும் வருமா?" என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

என்ன மாதிரியான கதை?
"ஆதலால் காதல் செய்வீர்" என்ற தலைப்பே பார்த்தால், இது குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட காதல் கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பாக்கியலட்சுமி மாதிரி உணர்ச்சி மற்றும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் கலந்த கதை இருந்தால், மீண்டும் ஒரு பெரிய ஹிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
மொத்தத்தில், சின்னத்திரையில் ஏற்கனவே ஹிட் ஆன முகங்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வருவது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் விஷயம். அதே உணர்வை மீண்டும் உருவாக்குமா இந்த புதிய சீரியல் என்பது விரைவில் தெரியும்.
-
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?














Click it and Unblock the Notifications