ஆவேசமாக முடிவெடுத்த கோபியின் தந்தை...கடைசியில் இப்படி பண்ணிட்டாரே...எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் லேட்டஸ்ட் ப்ரமோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.
கோபியை பற்றி மயூரா வின் வாயால் உண்மை உடைபட போகிறது என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கடைசி நேரத்தில் எதிர் நடந்தது அனைவருக்கும் வெறுப்பை கொடுத்துள்ளது.

உண்மையை உளறிய மயூரா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய நிகழ்ச்சியில் ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் திருப்பம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தன்னுடைய அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொள்வதைப் பற்றி மயூரா ஏற்கனவே அனைவருக்கும் கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபியின் தந்தை எப்படியாவது இதைப்பற்றி அனைவருக்கும் சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மயூரா குடும்பத்தோடு அனைவரிடமும் சகஜமாக சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய ப்ரமோ
கோபியின் தந்தை கையில் குடும்ப புகைப்படத்தை துடைத்துக் கொண்டிருக்கும் போது இந்த போட்டோவை காட்டி மயூ,இவரை உனக்கு தெரியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு எனக்கு தெரியும் இவர்தான் எங்கள் வீட்டுக்கு வருவார். கோபி அங்கிள்...எங்க அம்மா இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று உண்மையை உடைத்து விட்டார். இதைக்கேட்டு மொத்த குடும்பமும் ஆடிப்போய் இருக்கிறது. கோபியின் அம்மா என்ன உன் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அந்த குழந்தையிடம் மிரட்டி கொண்டிருக்க, பாக்கியா இவளுக்கு தெரியாமல் பேசுகிறார் என்று கூறி இருக்கிறார். ஆனால் மயூரா அப்படி எல்லாம் இல்லை இந்த கோபி அங்கிள் தான் எங்க அம்மாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார்.

எல்லாம் கனவா தாத்தா
தான் குடும்ப போட்டோவை கொண்டு மயூராவிடம் காட்டினால் இப்படித்தான் நடக்கும் என்று பகல் கனவு கண்டு முடித்திருக்கிறார் கோபியின் தந்தை. இதைத்தான் இன்றைய ப்ரமோவில் வெளியிட்டிருக்கின்றனர். ப்ரமோவை பார்த்து இன்றைய எபிசோடில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. கடைசியாக இந்த உண்மை தெரிந்தால் என் குடும்பம் தாங்காது என் குடும்பம் சின்னாபின்னமாகி விடும் அதனால் எனக்கு தெரிந்த உண்மை என்னுடனே இருக்க வேண்டும் என்று கண்ணீர் சிந்தியபடி ராமமூர்த்தி அதாவது கோபியின் தந்தை முடிவெடுத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே இவருடைய இந்த முடிவினால் தான் ஒவ்வொரு முறையும் கோபி தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

ரெஸ்டாரண்டில் கோபி, ராதிகா
வழக்கம்போல மயூரா வீட்டை விட்டு வெளியே கிளம்பியதும் பாக்கியா தன்னுடைய மாமியார் ,மாமனாரை சாப்பிட வந்து அழைத்துக் கொண்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவருடைய முகம் சரியில்லை என்று கோபியின் அம்மாவும் தன்னுடைய கணவரிடம் என்ன ஆச்சி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பசிக்கல.. நைட்டு சரியா தூங்கல அதனால்தான் இப்படி இருக்கிறது என்று கூறி முடித்து விட்டார். அடுத்ததாக ராதிகா மற்றும் கோபி இருவரும் ரெஸ்டாரண்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி, ராதிகாவை வர்ணித்து பேசிக் கொண்டிருக்கிறார். இருவரும் மாறிமாறி சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும்போது கோபிக்கு ஏற்கனவே பாக்கியாவோடு ரெஸ்டாரண்டில் வந்து சாப்பிட்ட ஞாபகம் வந்துவிடுகிறது. அப்போது ஒரு நூடுல்ஸ் சாப்பிட தெரியாமல் பாக்கியா நடந்து கொண்டது இவருக்கு சலிப்பாக இருக்கிறது.

பிரஷருக்கு காரணமே கோபிதான்
கோபியின் தந்தை சாப்பிடாததால், கோபியின் அம்மாவும் பாக்கியலட்சுமி யும் வந்து இருவரும் அவரை சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் எனக்கு தலை வலிக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் கோபியின் அம்மா இவருக்கு தலைவலி எல்லாம் வராது, அதனால் பிரஸர் எவ்வளவு இருக்கிறது என்று செக் பண்ணு என்று பாக்கியாவிடம் கூறுகிறார். அப்போது பிரஷர் இவருக்கு 160 இருக்கிறது என்று இருவரும் திகைத்து போய் இருக்கின்றனர். இதோடு இன்று எபிசோடு முடிந்துவிட்டது. நாளை எபிசோட்டில் கோபியிடம் காரசாரமாக அவருடைய தந்தை சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். மகனுக்கு கல்யாணம் முடிந்த பிறகு அப்பனுக்கு கல்யாணமா?? என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்பவே நான் எல்லாரிடமும் சொல்கிறேன் என்று கூறி விட்டு செல்கிறார்.
-
என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. விஜய் சேதுபதி உருக்கம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications