போட்டியாளர்களை கலாய்த்த பாலா...ரசிகர்களின் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டாரே
சென்னை: போஸ்ட்மேன் பொறுக்கி பொட்டுகடலை என்னும் பெயரில் வந்து ரசிகர்களின் மனக்குமுறலை பிக்பாஸ் வீட்டிற்குள் கொட்டியிருக்கிறார் பாலா.
இவர் பேசியதை பார்த்ததும் மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் ரசிகர்கள் பாலாவின் காமெடிக்கு எதிராக கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் ஒரு மாதங்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் ஒவ்வொரு வாரமும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும், பல கலவரமான சண்டை சச்சரவுகளும் வழக்கம் போல நடந்து கொண்டுதான் வருகிறது.இதில் ஒரு மாற்றமாக நேற்றைய எபிசோட்டில் தீபாவளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் போட்டியாளர்கள் பலரும் எதிர்பார்க்காத வகையில் பல சர்ப்ரைஸ்களை பிக் பாஸ் கொடுத்திருந்தது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நேற்றைய எபிசோட்டில் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர்.

பாலாக்கு வாழ்த்துக்கள் குவிகிறது
அதில் ஒரு பார்ட்டாக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இருப்பதை அப்படியே போட்டியாளர்களிடம் பட்டும்படாமலும் தனக்கே உரிய நக்கல் தனத்தோடும் பேசிய பாலாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது சமூக வலைத்தளத்தில் இவருடைய வார்த்தைகள்தான் மீம்ஸ்களாக வந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும், போட்டியாளர்களை பற்றியும் ரசிகர்களின் கருத்து என்று இவர் தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கலவரமான ரசிகர்கள்
போஸ்ட்மேன் பொறுக்கி பொட்டுகடலை என்னும் பெயரில் இவருடைய என்ட்ரியை பார்த்ததும் போட்டியாளர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டனர். இவர் சும்மா வாயை திறந்தாலே எதிரே இருப்பவர்களை வம்பிழுக்காமல் விடமாட்டார். இப்போ வேற லெட்டர் கொண்டு வந்திருக்கிறேன் என்று வந்திருக்கிறாரே....என்ன சொல்லப் போகிறாரோ என்று தான் அனைத்து போட்டியாளர்களும் முகத்தில் கலவரத்தோடு காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே இவரும் கண்டமேனிக்கு போட்டியாளர்களை கலாய்த்து எடுத்து விட்டார்.

பாலாவின் கலாய்ப்பு
இவர் லாஸ்ட் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டார்ல OTT ல பார்ப்பேன் ஆனா இந்த சீசன் ஓட்டி ஓட்டி தான் பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சி தொடங்கி 30 நாள் முடிவடைந்த பிறகும் ஒரு கன்டென்ட் கூட ஒரு முழுசாக உருப்படியாக எதுவும் கிடைக்கல. நானும் இங்கு வந்து பேச வேண்டும் என்று ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன் ஒன்றுமே கிடைக்கலையே!!..என்று இவர் இந்த சீசன் போட்டியாளர்களை பங்கமாக கலாய்த்து எடுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு வஞ்சனையில்லாமல் இவர் புகழ்வது போல ரசிகர்களின் குமுறல்களை கொட்டி விட்டார். இவரால் நேற்றைய எபிசோடு கலகலப்பாக மாறிவிட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications