வெகுண்டு எழுந்த தாமரை.. சண்டைக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு... இதுதான் காரணமா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்கள் முற்றியிருக்கிறது.
Recommended Video
தற்போது நான்காவது நாளில் தாமரை தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி விட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அல்டிமேட் ஆட்டம் ஆரம்பம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகின்றனர். ஏற்கனவே பல பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இதற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்த நிகழ்ச்சி நான்காவது நாளில் தற்போது அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் இதில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

என்ன நடக்குது அங்கே
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த தாமரைச்செல்வி மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். தற்போது தொடங்கி நான்கு நாட்கள் ஆன நிலையில் அவருடைய குரல் உயர்ந்து காணப்படுகிறது. தற்போது நடந்து வரும் செய்தியாளர்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களின் கேள்விகள் கேட்கும் இடத்தில் நடந்த கலவரத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். நடப்பது பட்டிமன்றமா அல்லது செய்தியாளர்கள் சந்திப்பா என வித்தியாசம் தெரியாமல் தாமரைச்செல்வி நடந்துகொண்டது பலருக்கும் வியப்பாக இருந்து வருகிறது என்று கூறிவருகின்றனர்.

இதுக்கெல்லாம் சண்டையா
சுஜா மற்றும் தாமரை செல்வி இடையே கருத்து மோதல்கள் நடக்கின்றது. நான் கேள்வி கேட்கணும் என்று சுஜா கத்திக் கொண்டிருக்கும்போது தாமரைச்செல்வி அது என்ன ஒரு ஆளு மட்டும் சொல்றது என்ற பதில் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதற்கு சுஜாவாருணி என்னை ஒரு கேள்வி கூட கேட்க விடவில்லை என்று கூறியிருக்கிறார். கேள்வி யார் வேணாலும் கேட்கலாம் என்று சொல்லி இருந்தது. அதனால்தான் நான் கேட்கிறேன் என்று தாமரைச்செல்வி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு அப்போது எல்லாத்துக்கும் காலம் கட்டாயம் என்று இருக்கிறது என சுஜா கிளாஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

திரும்பும் பக்கம் எல்லாம் சண்டை
பட்டிமன்றம் என்றால் எனக்கு கோபம் வந்து நான் அவங்க மாதிரியே பேசினால் அது சரி ஆனால் இது பிரஸ்மீட் அதனால் நான் கேள்வி கேட்பேன் என்று தன் தரப்பு வாதத்தை சுஜா எடுத்து கூறி வருகிறார். அதற்கு தாமரைச்செல்வி டாஸ்க் என்றால் எல்லோரும் நியாயமா விளையாடுறீங்களா?? அப்புறம் ஏன் இதை பட்டிமன்றம் பிரஸ் மீட் என்று எதுக்கு அவங்க பேசுறாங்க என்று காரசாரமாக சினேகனிடம் கூறியிருக்கிறார். திரும்பும் திசையெல்லாம் சண்டை சச்சரவாக இருக்கும் இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் அல்டிமேட் வீடு இன்று அனலாக ஜொலிக்கிறது என்று கூறிவருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications