கண்ணீரோடு விடைபெற்ற பாரதி கண்ணம்மா குழுவினர்.. கடைசி நேரத்தில் வெளியான ட்விஸ்ட்
பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் முடிந்ததை தொடர்ந்து அனைவரும் பிரியாவிடை கொடுத்து பிரிந்ததை அந்த சீரியலின் ஹேமா வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் கடைசி நாளில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதில் சூட்டிங் ஸ்பாட்டில் இந்த சீசனின் முடிவை குறித்து உருக்கமாக கண்கலங்கியபடியே பிரியா விடை கொடுத்த சீரியலின் ஹேமா வெளியிட்ட வீடியோ பல்வேறு கருத்துக்களை ட்விஸ்ட்களை கொடுத்திருக்கிறது.
சீரியலின் கடைசியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது அந்த வீடியோவில் கசிந்து இருக்கிறது.

முடிவுக்கு வரும் முதல் பாகம்
நெட்டிசன்கள் அதிகமாக கேட்டுக் கொண்டிருந்த ஒரே வார்த்தை பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடியும் என்பதாகத்தான் இருக்கும். இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து நெட்டிசன்களுக்கு பிடித்த சீரியல் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியல் கதைக்களம் பல நேரங்களில் கலாய்க்கப்பட்டு மீம்ஸ்களாகவும் ட்ரோல் வீடியோக்களாகவும் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பாரதி கண்ணம்மா சீரியல் சுமார் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் தற்போது முதல் பாகம் முடிவடைய இருக்கிறது .

முடிவில்லாத கதை
ஒவ்வொரு முறையும் இப்போ முடிந்துவிடும் அப்போ முடிந்து விடும் என்று ஏமாற்றம் காட்டிக்கொண்டே வந்த இந்த சீரியல் தற்போது உண்மையில் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. பாரதியின் டின்ஏ முடிவு வெளியானதும் குழந்தைகள் இருவரும் பாரதியின் குழந்தைகள் என்பதை பாரதி தெரிந்து கொண்டதும் சீரியல் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனார். ஆனால் அதிலேயும் ட்விஸ்ட் வைத்த இயக்குனர் சீரியலில் ரசிகர்கள் இப்படியே முடித்தால் நன்றாக இல்லை என்று கருத்து கூறியதால் தான் நான் முடிக்கவில்லை என்று ரசிகர்களின் மீது பழியை போட்டுவிட்டு சீரியலை மீண்டும் இழுத்து பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தார்.

காரணம் என்னவாக இருக்கும்
பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னெட் ஏற்கனவே ராஜா ராணி சீரியலையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது மூன்றாவது ஆக புதிய சீரியல் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து மூன்று சீரியல்கள் ஒரே நேரத்தில் இயக்க முடியாது என்று ரசிகர்களை பாவம் பார்த்து விட்டு விட்டாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். பாரதி குழந்தைகளை ஏற்றுக் கொண்டதும் கண்ணம்மா நான் இனி உன்னை மன்னிக்க மாட்டேன் என்று மீண்டும் வீட்டை விட்டு கிளம்பி விட்டார். பாரதி கண்ணம்மாவின் மனதை மாற்றி மீண்டும் ஊருக்கு கூட்டிக் கொண்டு வருவேன் என்று கிராமத்திற்கு வந்து பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர்.

வீடியோவில் தெரிந்த உண்மை
இந்த நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு மீண்டும் திருமணம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். பாரதி மற்றும் கண்ணம்மாவில் திருமணத்தோடு இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது. இந்த சீரியலுக்கான கடைசி எபிசோடு மேக்கிங் முடிந்து விட்டது. அந்த வீடியோவை தற்போது இந்த சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசா வெளியீட்டு, பாரதிகண்ணம்மா சீரியல் இது ஒரு உணர்வு அல்ல இது ஒரு உணர்ச்சி, இது ஒரு மகிழ்ச்சியான அற்புதமான மற்றும் சிறந்த பயணம். உங்கள் அனைவரிடமும் இருந்து விடை பெற வேண்டிய நேரம் இது என்று அனைவருக்கும் நன்றி கூறி, நான் ஹேமாவாக எல்லோருக்கும் தெரிவதற்கு காரணம் பாரதி கண்ணம்மா தான் என்று நெகிழ்ச்சியோடு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ஏற்கனவே கண்ணமாவாக இருந்த ரோஷினியும் இடம் பிடித்திருக்கிறார். அதனால் அனைவரும் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது உறுதியாகி இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications